For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென கட்சி தாவிய எம்பி.. பெரும்பான்மையை இழந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

Google Oneindia Tamil News

லண்டன்: ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி எம்பி திடீரென கட்சி திடீரென லிபரல் கட்சி மாறியதால் பிரிட்டன் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்து இருந்தது. இதற்காக 'பிரெக்ஸிட்' மசோதாவை தாக்கல் செய்து, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒப்புதலை பெற பலமுறை ஓட்டெடுப்பு நடத்தினார் முந்தைய பிரதமர் தெரசா மே. அனால் அதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகள் வந்து ஓட்டுப்பு தோல்வியில் முடிந்த காரணத்தால், தெரசா மே கடந்த மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

British PM Boris Johnson lost his majority in parliament

இதனால் இங்கிலாந்தின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்ர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் புதிய பிரதமராக கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பதவியேற்றார். அவர் பதவியேற்ற பின்னர் எந்த சூழ்நிலையிலும் அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என்று அறிவித்து இருந்தார்.

இதற்காக பதவியேற்ற சில மாதங்களுக்குள்ளாக பிரெக்ஸிட்டை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்தில் அவர் இருந்தார். இல்லையென்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறும் முடிவை எடுக்க நிலை பிரிட்டனுக்கு உள்ளது.

ப சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைதுப சிதம்பரத்தை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவக்குமார் கைது

ஆனால் பிரெக்ஸிட் ஒப்பந்ததை நிறைவேற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி பிலிப் லீ, லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியில் இணைந்தார். இதனால், நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்ததை எதிர்த்து எம்.பி பிலிப் லீ, லிபரல் கட்சிக்கு தாவியுள்ளார். இதனால் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

English summary
British PM Boris Johnson lost his majority in parliament after rebel Tory MP defects to Liberal Democrats
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X