For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏம்ப்பு, பன்றி வாயில போய் 'அதை' வைப்பாங்களா: யு.கே. பிரதமரை ட்விட்டரில் கலாய்க்கும் மக்கள்

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இறந்த பன்றியின் வாயில் தனது ஆணுறுப்பை வைத்ததாக அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்கள் அவரை கிண்டல் செய்து ட்வீட் போட்டு வருகிறார்கள்.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் பற்றி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் ஆஷ்கிராப்ட் மற்றும் பத்திரிக்கையாளர் இசபெல் ஓக்ஷாட் ஆகியோர் கால் மீ டேவ் என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர். விரைவில் வெளியாகவுள்ள அந்த புத்தகத்தில் காமரூன் பற்றி அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

காமரூன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் பிராஸ்னிசோஸ் கல்லூரியில் கடந்த 1985ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை படித்துள்ளார். அப்போது அவர் இறந்த பன்றி ஒன்றின் வாயில் தனது ஆணுறுப்பை வைத்தது தெரிய வந்துள்ளது. அவர் அவ்வாறு செய்ததற்கு ஆதாரமாக புகைப்படமும் உள்ளது என்று லண்டனைச் சேர்ந்த டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் கல்லூரியில் படிக்கையில் காமரூன் போதைப் பொருளும் பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில் மக்கள் காமரூனை ட்விட்டரில் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

டேவ்

டேவ் என்னும் ப்ளோக் தனது காரில் எனக்கு லிப்ட் கொடுத்தார்.... #piggate #hameron என்று கூறி பன்றியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பார்ரி.

கார்

பிரதமரின் புதிய கார் வந்துவிட்டது டேவ் #hameron #piggate என பார்ரி காமரூனை கிண்டல் செய்துள்ளார்.

பேபி

#piggate #hameron நன்றாக அலங்கரித்துக் கொண்டுள்ளேன், யாராவது என் பேபியை பார்த்தீர்களா என்று மேக்கப் போட்டுக் கொண்டுள்ள பன்றி கேட்பது போன்று ட்வீட் செய்துள்ளார் லேடி ஏஞ்சலா.

சிரிப்பு

சிரித்து சிரித்து எனக்கு கண்ணீர் வருகிறது #Hameron #Bacon #PigGate என மார்க் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Tweeples are making fun of England Prime Minister David Cameron for putting his private part in dead pig's mouth during his college days.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X