For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐநா. சர்வதேச அமைதி தினம்.. பஹ்ரைனில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்

Google Oneindia Tamil News

மனாமா: செப்டம்பர் மாதம் 21ம் நாள் ஐநா சபையால் சர்வதேச அமைதி தினம் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்,"Bahrain for all" மற்றும் இங்கிலாந்திலிருந்து இயங்கி வரும் "Peace One Day" ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமிற்கு The Indian club உள்ளரகில் ஏற்பாடு செய்திருந்தது.

BTA observes sepcial medical camp

பல்வேறு துறைகளை சேர்ந்த 6 சிறப்பு மருத்துவர்களை கொண்ட மருத்துவ குழுவை பஹ்ரைன் KIMS மருத்துவமனை வழங்கி இருந்தது.

BTA observes sepcial medical camp

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க பொது செயலாளர் செந்தில் குமார், நிகழ்ச்சி பொறுப்பாளர் கார்த்திக் செந்தூரபாண்டியன் KIMS மருத்துவமனையை சேர்ந்த இராஜசேகர், இந்தியன் கிளப்பின் செயலாளர் நந்தகுமார் மற்றும் மருத்துவர்கள் சஞ்சீவ், ஷைணீர் ஆகியோர் குத்துவிலகேற்றி தொடங்கி வைத்தனர்.

BTA observes sepcial medical camp

பஹ்ரைனில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாள், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 900 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

BTA observes sepcial medical camp

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் இந்த சிறப்பான நிகழ்வுக்காக பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் மனமார பாராட்டினர்.

BTA observes sepcial medical camp

இந்த முகாம் பற்றிய செய்தி ஐநா சபையின் செய்திக்குறிப்பில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தில் இணைய என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் (35362495).

English summary
BahrainTamils Association conducted a sepcial medical camp on the eve of UN International peace day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X