For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு காலத்தில்.. 5 கோடி பேரை பலி கொண்ட புபோனிக் பிளேக்.. சீனாவிலிருந்து இந்தியா பரவ வாய்ப்பு உள்ளதா?

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் பரவிவரும் புபோனிக் பிளேக் நோய் பாதிப்பு மிகவும் ஆபத்தான ஒன்று. மனிதகுல வரலாற்றில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய பாக்டீரியா நோய்த் தொற்று இதுதான். கருப்பு சாவு என்று அழைக்கப்படும் கூடிய இந்த நோய் நூற்றாண்டுகளுக்கு முன்பு உலகை உலுக்கியது.

Recommended Video

    Bubonic plague சீனாவில் அடுத்த தொற்றுநோய்? மக்களுக்கு எச்சரிக்கை

    ஐரோப்பாவில் இந்த நோய் பாதிப்பால் அப்போது சுமார் 5 கோடி மக்கள் உயிரிழந்தனர்.

    சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள ஒரு நகரில் புபோனிக் பிளேக் எனப்படும் நோய் இரு சகோதரர்களுக்கு கண்டறியப்பட்டது.

    கொரோனாவை விட மோசமான புபோனிக் பிளேக்.. கழுத்து, இடுப்பில் கோழி முட்டை சைஸுக்கு வீங்குமாம்! கொரோனாவை விட மோசமான புபோனிக் பிளேக்.. கழுத்து, இடுப்பில் கோழி முட்டை சைஸுக்கு வீங்குமாம்!

    அணில்கள்

    அணில்கள்

    இந்த இருவரும் மர்மோட் எனப்படும், காட்டு அணில் வகையைச் சேர்ந்த விலங்கை சாப்பிட்ட பிறகுதான் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். எனவே மக்கள் யாரும் மர்மோட், இறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று சீனா அறிவுறுத்தியுள்ளது. விலங்குகளின் கழிவுகள் மூலமாக மட்டுமின்றி, விலங்குகளை கடிக்கும் பூச்சிகள் மூலமாகவும் மனிதர்களுக்கு இந்த நோய் பரவக் கூடியது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது.

    எளிதாக பரவாது

    எளிதாக பரவாது

    பொதுவாக புபோனிக் பிளேக் பரவுது கிடையாது. அரிதாகத்தான் பரவுகிறது. ஆனால், ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் உலகத்தை அச்சுறுத்தி வரும் நிலையில், இப்போது புபோனிக் பிளேக், புது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருமல், குளிர் மற்றும் காய்ச்சல் போன்றவை இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

    மங்கோலியா

    மங்கோலியா

    போன வாரம்,சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்தில் உள்ள ஒரு நகரில் இரு சகோதரர்களுக்கு புபோனிக் பிளேக் பரவிய நிலையில் அதே மங்கோலியா பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் இரண்டு பேருக்கு நிமோனியா பிளேக் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் பிளேக் நோயின் மற்றொரு வகை.

    தடுப்பு

    தடுப்பு

    தடுப்பு நடவடிக்கைக்காக அணில்களை வேட்டையாடுவதை தடுப்பதற்கு ரஷ்யா ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. சீனா மற்றும் மங்கோலிய எல்லைகளில் ரஷ்ய வீரர்கள் இந்த வகை அணில்களை, மக்கள், வேட்டையாடுவதை கண்காணித்து வருகிறார்கள். சீன அரசும் இந்த இறைச்சியை சாப்பிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு உள்ளது.

    இந்தியாவுக்கு பரவுமா

    இந்தியாவுக்கு பரவுமா

    1994 ஆம் ஆண்டில் பிளேக் நோய் இந்தியாவை கடுமையாக பாதித்தது. குறிப்பாக மத்திய மற்றும் மேற்கு இந்தியா மாநிலங்களில் அதிக பாதிப்பு இருந்தது. 693 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு 56 பேர் பலியாகியிருந்தனர். அப்போது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு பயணிப்போர் குறைவு என்பதால் அந்த நோய் பல இடங்களுக்கு பரவவில்லை. இப்போது கொரோனா காரணமாக உலகின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், சீனாவில் இருந்து இந்தியா போன்ற நாடுகளுக்கு பிளேக் பாதிப்பு பரவுவதற்கு வாய்ப்பு குறைவு என்பது நமது மக்களுக்கான மகிழ்ச்சி தகவல்.

    English summary
    Bubonic plague decease spreading in China, will it sprad to other countries like India? here is the detail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X