For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெருவில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து... புத்தாண்டு கொண்டாடி திரும்பிய 48 பேர் பலி!

பெருவில் பயணிகள் சென்ற பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 48 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

லிமா : தென் அமெரிக்க நாடான பெருவில் பயணிகள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். உயிரிழந்தவர்களின் உடல்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து 57 பயணிகளுடன் புறப்பட்ட பேருந்து ஒன்று ட்ரக் மீது எதிர்பாராமல் மோதியதில் மோசமாக பள்ளம் ஒன்றில் தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது. கடற்கடிடிரயை ஒட்டி அமைந்துள்ள அந்த பேராபத்தான பள்ளத்தில் பேருந்து தலைக்குப்புறக் கவிழ்ந்ததில் பேருந்தில் பயணித்த 48 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிகிறது.

Bus plunges at Peru's Pasamayo killed 48

பேருந்து தலைக்குப்புறக் கவிழ்ந்ததில் பசிபிக் கடற்கரையை யொட்டி அமைந்திருந்த அந்த பள்ளத்தில் இருந்த பாறைகளில் மோதி உடல்கள் சிதறியுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்காக ஹெலிகாப்டர் உதவி நாடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தை நகரின் வெளியே கொண்டாடி விட்டு தலைநகர் லிமா திரும்பிய நிலையில் பயணிகளுக்கு இந்த சோகம் நேர்ந்துள்ளதாக பெரு நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நடந்தது லிமாவின் வடக்கே 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசமயோ என்ற இடத்தில் நடந்துள்ளது. இந்த இடத்திற்கு நேரடியாக எந்த நேரடி சாலை இணைப்பும் இல்லாத நிலையில் பேருந்து ஒன்று சிறப்பு ஏற்பாட்டின் பேரில் பயணிகளை சுற்றுலாவிற்காக அழைத்து சென்றுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து தலைநகர் திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து நடந்துள்ளது.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்க ஹெலிகாப்டர் அழைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், தீயணைப்பு வீர்களைக் கொண்டு உயிருக்கு போராடிய 5 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெருவில் சாலை விபத்துகள் என்பது அடிக்கடி நிகழக்கூடியதாக இருக்கின்றன. கடந்த 2016ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 2,600 பேர் உயிரிழந்துள்ளனர். 2015ம் ஆண்டில் 3 பேருந்துகள் அடுத்தடுத்து டிராக்டர்களில் மோதியதில் 36 பேர் பலியாகினர்.

English summary
A Bus with onboard 57 passengers plunged into Devil curve and killed 48 lives, the accident taken place away from 70kms of capital Lima while passengers returning after their new year celebrations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X