For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவ்ளோ நீளமான யம்மி பீட்சா... கலிபோர்னியா சமையல் கலைஞர்கள் தயாரிப்பு

2 கி.மீ. நீளம் கொண்ட பீட்சாவை தயாரித்து கலிபோர்னியா சமையல் கலைஞர்கள் இத்தாலியில் கடந்த ஆண்டு உலக சாதனையை முறியடித்துள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2.13 கி.மீ. நீளம் கொண்ட பீட்சாவை அந்நாட்டு சமையல் கலைஞர்கள் தயாரித்து முந்தைய ஆண்டு சாதனையை முறியடித்துள்ளனர்.

பீட்சாவை விரும்பாத இன்றைய தலைமுறையினர் இல்லவே இல்லை என்று சொல்லலாம். பீட்சா, பர்கர், ஹாட் டாக் என்ற உணவு பொருள்கள் வந்தவுடன் பஜ்ஜி, போண்டா, வடைக்கு இருந்த மவுசு நகர்ப்புறங்களில் குறைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அவ்வாறு இருக்கையில் வெளிநாடுகளில் சொல்லவே தேவையில்லை. பீட்சா என்ற உணவு பொருள் ருசிக்க மட்டுமே என்றிருந்த நிலையில் தற்போது அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும், உலக சாதனை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

நட்பை கொண்டாட...

நட்பை கொண்டாட...

அந்த வகையில் மனித நேயத்தையும், நட்பையும் கொண்டாடும் விதமாக கலிபோர்னியாவின் போன்டனாவில் ஒரு அமைப்பின் சார்பில் நீளமான பீட்சா செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஏராளமான சமையல் கலைஞர்கள் இணைந்து சாதனை படைக்க ஆயத்தமாகினர்.

எத்தனை கிலோ

எத்தனை கிலோ

மொத்தம் 7,808 கிலோ எடை கொண்ட பீட்சா தயாரிக்கப்பட்டது. சுமார் 1.93 கிலோ மீட்டர் தூரமும் 6,333 அடி நீளமும் கொண்டதாகும். 3,632 கிலோ மாவு கொண்டு 1,634 கிலோ சீஸ் மற்றும் 2,542 கிலோ சாஸ் கொண்டு தயாரிக்கப்பட்டது.

3 ஓவன்கள்

3 ஓவன்கள்

இந்த பீட்சாவை தயாரிக்க 3 மைக்ரோவேவ் ஓவன்கள் பயன்படுத்தப்பட்டன. அவை 8மணி நேரங்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு 17 நிமிடங்களுக்கு முறை ஓவன்களை நிபுணர்கள் இடம் மாற்றினர்.

பணம் யாருக்கு?

பணம் யாருக்கு?

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானங்களும் உள்ளூரில் உள்ள உணவு வங்கிகளுக்கும் (உணவு தேவையுள்ள மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும்) வீடு இல்லாதோருக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு இதேபோல் 6,082 அடி நீளமான பீட்சா தயாரிக்கப்பட்டது. இதுவே உலக சாதனையாக இருந்தது. தற்போது கலிபோர்னியாவில் 6,333 அடியில் தயாரிக்கப்பட்ட பீட்சா முன்னர் இருந்த சாதனையை முறியடித்துவிட்டது.

English summary
A pizza almost two km long, made in east of Los Angeles, became the world's longest as it exceeded the previous record set in Italy last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X