For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பான் மாதிரி நியூயார்க்கிலும் விரைவில் மிதக்கும் ரயில்!

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் இரண்டு பெரு நகரங்களை இணைக்கும் "மிதக்கும் ரயில்" திட்டம் அமலில் வந்து பல நாட்களுக்குப் பின்னர் தற்போது அதே போன்ற தொழில்நுட்பத்துடன் கூடிய பறக்கும் ரயில்களை அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது அமெரிக்க அரசு.

வடகிழக்கு மாக்லெவ் என்ற தனியார் நிறுவனத்தின், வியானே ரோஜர் என்ற முதன்மை நிர்வாகி இந்த மேக்னடிக் ரயில் தண்டவாளத்தையும், பறக்கும் ரயில் திட்டத்தையும் வாஷிங்டன் முதல் நியூயார்க் வரையில் வெறும் ஒரு மணி நேரத்தில் சென்றடையும் வகையில் அமல்படுத்த உள்ளனர்.

Campaign for ‘Floating Train’ to Connect New York and Washington Gathers Pace

அடுத்த வருடம் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் "டிஎன்ஈஎம்" என்ற கம்பெனியானது, மேரிலேண்ட்டில் முதல்முறையாக ரயில்வே பிரான்சிஸ்க்கு வித்திட்டதன் மூலமாக இந்த பறக்கும் ரயில் திட்டத்திற்கு முதல் விதை விழுந்துள்ளது. இதன்மூலமாக வாஷிங்டன்னில் இருந்து பால்ட்டிமோர் வரையில் 15 நிமிடங்களுக்குள் சென்று அடைந்து விடலாம்.

"இந்த இரண்டு திட்டங்களும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளன" என்று ரோஜர், டோக்கியோவில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இயற்கை சார்ந்த காரணிகளை ஆராய்ந்த பின்னர் இந்த திட்டமானது அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Days after the Japanese government approved plans to build a floating train that would halve the travel time between the country's two largest metropolitan areas, supporters of the technology are stepping up their campaign to bring a similar system to the Northeast Corridor of the U.S.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X