For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா பாணியில் இந்தியாவுக்கான கனடா தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமனம்

By Mathi
Google Oneindia Tamil News

Canada appoints Indo-Canadian Nadir Patel as envoy to India
டொரன்டோ: இந்தியாவுக்கான கனடா நாட்டுத் தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடிர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகமும், வர்த்தக மேம்பாட்டுத் துறையும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கான கனடா தூதராக நாடிர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, கனடா - இந்தியா நாடுகளிடையேயான உறவை அவர் மேலும் பலப்படுத்துவார்.இருதரப்பு வர்த்தகம், சர்வதேசப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க அவரது நியமனம் உறுதுணையாக இருக்கும்.

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் பேர்ட், சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் எட் ஃபாஸ்ட் ஆகியோர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இருதரப்பு வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அவர்களுடன் நாடிர் படேலும் பேச்சுவார்த்தியில் கலந்துகொள்வார்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா பாணி

அண்மையில் இந்தியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக அந்நாடு வாழ் இந்தியரான ரிச்சர்ட் வெர்மாவை ஒபாமா நியமித்திருந்தார். தற்போது அமெரிக்கா பாணியில் கனடாவும் இந்தியாவுக்கான தூதராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடிர் படேலை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Indo-Canadian Nadir Patel has been appointed as Canada's new High Commissioner to India, a move aimed at strengthening the relationship between two countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X