For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

63 பேர் பலியாகிவிட்டனர்.. எனக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.. ஈரானை மிரட்டும் ஜஸ்டின் ட்ரூடோ!

ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக ஈரான் பதில் சொல்லியாக வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

ஒட்டவா: ஈரான் ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தொடர்பாக ஈரான் பதில் சொல்லியாக வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையில் தற்போது போர் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா ஆகிய நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் கடந்த மூன்று நாட்கள் முன் கீழே விழுந்து நொறுங்கியது..

விமானத்தில் பயணித்த 176 பேரும் பலியானார்கள். இந்த விமானம் உக்ரைன் அரசுக்கு சொந்தமான உக்ரைனியன் சர்வதேச ஏர்லைனர் விமானம் ஆகும். ஈரான்தான் இதை தாக்கி அழித்தது என்று இன்று காலை ஒப்புக்கொண்டது.

விமான தாக்குதல்

விமான தாக்குதல்

இந்த விமான தாக்குதல் தொடர்பாக கனடா விசாரிக்க தொடங்கி உள்ளது. இந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் மொத்தல் 63 கனடா மக்கள் மரணம் அடைந்தனர். இதனால் இதை மிகப்பெரிய பிரச்சனையாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அணுக தொடங்கி உள்ளார்.

என்ன உதவி

என்ன உதவி

இந்த விமான விபத்து தொடர்பாக தற்போது உக்ரைன் அரசு, கனடாவின் உதவியை நாடி உள்ளது. பொதுவாக விமான விபத்து தொடர்பான ஆராய்ச்சிகள், விசாரணைகளை கனடா அரசுதான் அதிகமாக நடத்தும். அவர்களிடன் இதில் பலர் தொழில்நுட்ப பிரிவினர் உள்ளனர். அதனால் உக்ரைன், கனடா அரசிடம் உதவி கேட்டுள்ளது.

என்ன பேட்டி

என்ன பேட்டி

இந்த நிலையில் ஜஸ்டின் ட்ரூடோ இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். உக்ரைன் நாட்டு விமானத்தை ஈரான் தாக்கி அழித்தது கண்டனத்திற்கு உரியது. இதை ஒரு போதும் ஏற்க முடியாது. எங்கள் மக்கள் 63 பேர் இதில் பலியாகி உள்ளனர். இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

விசாரணை செய்கிறோம்

விசாரணை செய்கிறோம்

இது தொடர்பான விசாரணையை தொடங்கி இருக்கிறோம். முக்கியமான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதை விரைவில் வெளியிடுவோம். இதற்கு பின் பெரிய தவறு நிகழ்ந்துள்ளது.

என்ன பதில்

என்ன பதில்

கனடா குடிமகன்கள் உயிரை இழந்து உள்ளனர். இதற்கு ஈரான் பதில் சொல்ல வேண்டும். எனக்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்று கனடா பிரதமர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஈரான் - கனடா இடையே மிகப்பெரிய அளவில் சண்டை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
Canada PM Justin Trudeau seeks an answer from Iran for shooting down Ukrainian airplane.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X