For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்டி இளவரசர் உருவம் பதித்த ஸ்டாம்ப் வெளியிட்ட கனடா போஸ்ட்

By Siva
Google Oneindia Tamil News

Canada Post unveils Prince George stamp
ஒட்டாவா: இங்கிலாந்து இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் குட்டி இளவரசர் ஜார்ஜ் ஆகியோரின் உருவம் அடங்கிய தபால் தலையை கனடா அரசு வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயி என்று பெயர் வைத்தனர்.

இந்நிலையில் குட்டி இளவரசரை கௌரவிக்கும் விதமாக கனடா அரசு தபால் தலை ஒன்றை வெளியிட முடிவு செய்தது. அதன்படி கடந்த 17ம் தேதி இளவரசர் வில்லியம், கேட், கைக்குழந்தையான ஜார்ஜின் உருவமுள்ள தபால் தலையை கனடா அரசு வெளியிட்டது. குறைந்த அளவே அச்சடிக்கப்பட்டுள்ள இந்த தபால் தலைகள் நாளை முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்த தபால் தலையைில் உள்ள புகைப்படடம் கேட்டின் தந்தை மைக்கேல் மிடில்டன் எடுத்தது. கனடா அரசு முன்னதாக வில்லியம், கேட்டின் நிச்சயதார்த்தம், திருமணம் என்று 2 நிகழ்வுகளின்போது தனித்தனியாக 2 தபால் தலைகளை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Canada post has released a stamp bearing the images of Prince William, his wife Kate Middleton and little prince George on october 17. This limited edition stamp will be on sale from october 22.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X