For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்' .. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் பொங்கல் வாழ்த்து

Google Oneindia Tamil News

ஒட்டாவா: கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ளார். தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

 canada prime minister Justin Trudeau pongal wishes to tamil peoples

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஜனவரி 14ம் தேதி துவங்கியது.14ம் தேதி போகி பண்டிகையும் அடுத்த நாளான நேற்று (ஜன 15) உழவுக்கு உயிர் ஊட்டிய சூரியனுக்கு நன்றி சொல்லும் வகையில் பொங்கல் பண்டிகையும் நேற்று கொண்டாடப்பட்டது. இன்று கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் வகையில் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. நாளை விரும்பிய இடங்களுக்கும், உறவுகளை தேடி சென்று விருந்துண்டு மகிழும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு துவங்கியது.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்புபாலமேடு ஜல்லிக்கட்டு துவங்கியது.. திடீரென நடத்தப்பட்ட தடியடியால் பரபரப்பு

இந்த பண்டிகை தமிழகம் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. கனடாவில் கணிசமான அளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். இதையடுத்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தமிழில் வணக்கம் தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார்.

கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என்று பெருமிதம் தெரிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடா, தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

English summary
canada prime minister Justin Trudeau on twitter: Iniya Thai Pongal Nalvazhthukkal! Wishing everyone celebrating a joyful festival and a happy Tamil Heritage Month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X