For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ட்ரம்ப் தடை விதிச்சா என்ன? நீங்க எங்க நாட்டுக்கு வாங்க... கனடா பிரதமர் தாராளம்

அமெரிக்கா தடைவிதித்துள்ள இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் அகதிகள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டொராண்டோ: அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு டிவிட்டர் வாயிலாக வரவேற்றுள்ளார். அடக்குமுறை, போர் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து வருபவர்களை கனடா வரவேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட நாள் முதலே டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரியை தோற்கடித்த வெற்றி பெற்றார்.

ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாள் முதலே இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20ஆம் தேதி பதவியேற்றார்.

சுவர் எழுப்பும் முன்னரே விரிசல்

சுவர் எழுப்பும் முன்னரே விரிசல்

இதையடுத்து அகதிகள் நுழைவதை தடுக்க மெக்ஸிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் எழுப்ப அவர் உத்தரவிட்டார். இது அமெரிக்கா - மெக்ஸிகோ நாடுகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுவர் எழுப்பும் முன்னரே இருநாட்டு உறவுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது.

7 இஸ்லாமிய நாடுகளுக்குத் தடை

7 இஸ்லாமிய நாடுகளுக்குத் தடை

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடைவிதித்துள்ளார். அமெரிக்காவில் சட்டத்திற்கு விரோதமாக உள்ள அகதிகளையும் வெளியேற்ற அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ட்ரம்ப்க்கு எதிராக போராட்டம்

ட்ரம்ப்க்கு எதிராக போராட்டம்

இதுதொடர்பன அரசாணைகளில் அவர் நேற்று கையெழுத்திட்டார். இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அகதிகளுக்கு கனடா வரவேற்பு

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள் கனடாவுக்கு வரலாம் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு தெரிவித்துள்ளார். அடக்குமுறை, போர் மற்றும் பயங்கரவாதத்தில் இருந்து வருபவர்களை கனடா வரவேற்கும் என டிவிட்டர் வாயிலாக பிரதமர் ஜஸ்டின் கூறியுள்ளார்.

பன்முகத்தன்மை எங்கள் பலம்

பன்முகத்தன்மை எங்கள் பலம்

பன்முகத்தன்மை எங்கள் பலம் என்றும் ஜஸ்டின் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜஸ்டினின் வரவேற்புக்கு கனடா நாட்டு தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜஸ்டினின் நிலைப்பாட்டுக்கு நாடுகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

English summary
Canada Prime minister Justin trudeau welcomes refugees to canada throw twitter. At the same time In US protest getting strong against President Trump.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X