For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழர்களுக்கு குட் நியூஸ்.. கனடாவில் கலக்கும் ஜஸ்டின் ட்ரூடோ.. கணிப்புகளை தவிடு பொடியாக்குகிறார்

கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Canada Election: Justin Trudeau wins minority government?

    ஓட்டவா: கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா லிபரல் கட்சி வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    உலகில் மிஞ்சியிருக்கும் தாராளவாத மற்றும் இடதுசாரி கொள்கை கொண்ட ஒரே தலைவர் என்று பெயர் பெற்றவர்தான் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கனடாவின் லிபரல் கட்சி சார்பாக போட்டியிட்டு இவர் அந்நாட்டின் பிரதமராக தேர்வானார்.

    உலகில் ஜனநாயகம் பாதிப்பில்லாமல், மதிக்கப்படும் நாடுகளில் கனடாவும் ஒரு நாடு ஆகும். உலகம் முழுக்க நாடு இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு கனடாதான் வாழ்வளித்து வருகிறது.

    2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அஸ்ஸாமில் அரசு பணி இல்லை!2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அஸ்ஸாமில் அரசு பணி இல்லை!

    எப்படி அகதிகள்

    எப்படி அகதிகள்

    இலங்கை தமிழ் அகதிகள் தொடங்கி சிரியா அகதிகள் வரை கனடாவில் லட்சக்கணக்கில் அகதிகள் குடியேறி உள்ளனர். அகதிகளுக்கு அந்நாடு நிறைய சிறப்பான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கனடாவில் குடியேற பல நாட்டை சேர்ந்த மக்கள் விருப்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எப்படி

    பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எப்படி

    அதேபோல் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகம் முழுக்க பல கோடி மக்களால் மதிக்கப்படுகிறார். இவருக்கு தமிழ் மொழி மீது கூடுதல் பாசம் இருக்கிறது. இதனால் தமிழர்கள் மத்தியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தல் எப்படி

    தேர்தல் எப்படி

    இந்த நிலையில் கடந்த மாதம் கனடா நாட்டின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தார். நேற்று கனடா நாட்டின் நாடாளுமன்றம் தேர்தல் நடந்தது. இது தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளது. மெஜாரிட்டிக்கு 170 இடங்கள் தேவை. இதில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வலதுசாரி கொள்கை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சி 100 இடங்களுக்கும் குறைவாக வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

    யார் ஆட்சி

    யார் ஆட்சி

    இடதுசாரி கொள்கை கொண்ட சிறிய கட்சிகள் பல இந்த தேர்தலில் 10க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்கிறார்கள். இதனால் இடதுசாரிகள், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைப்பார்கள். மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சி அமைப்பார். ஆனால் அது மைனாரிட்டி அரசாக இருக்கும் என்கிறார்கள்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    கடந்த முறை ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வந்த போது, அவருக்கு நிறைய தொண்டர்கள் இருந்தனர் . ஆனால் தன்னுடைய ஆட்சி காலத்தில் நிறைய விமர்சனங்களை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார்.அதேபோல் அரசின் பணத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிநாடு சென்று சுற்றி வருகிறார் என்றும் புகார் உள்ளது. அகதிகளுக்கு சரியான பணிகளை உருவாக்குவதில் கனடா அரசு சமீப காலமாக திணறி வருகிறது.

    ஊழல் அதிகம்

    ஊழல் அதிகம்

    அவரின் கட்சியை சேர்ந்த சிலர் அதிகமாக ஊழல் செய்துவிட்டனர். ஆனால் அதன்மீது ஜஸ்டின் ட்ரூடோ சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் உள்ளது. மேலும் இவர் கருப்பு மேக் அப் போட்டு பிரச்சாரம் செய்ததாகவும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி

    வெற்றி

    இதுதான் அவர் பல இடங்களில் தோல்வி அடைய காரணமாக அமையும் என்கிறார்கள். ஆனாலும் எப்படியாவது மைனாரிட்டி ஆட்சியை ஜஸ்டின் ட்ரூடோ அமைத்துவிடுவார். கனடாவில் இருக்கும் தமிழர்கள் இதை பெரிய அளவில் வரவேற்று உள்ளனர். கனடாவில் கன்சர்வேட்டிவ் கட்சி கண்டிப்பாக வெற்றிபெறாது என்று கூறுகிறார்கள்.

    உலகம் முழுக்க எப்படி

    உலகம் முழுக்க எப்படி

    இந்தியாவில் பாஜக, பிரான்சில் போரிஸ் ஜான்சன், அமெரிக்காவில் டிரம்ப் என்று உலகம் முழுக்க வலதுசாரி கொள்கை கொண்ட கட்சிகள்தான் தற்போது ஆட்சியில் இருக்கிறது. கனடாவில் அதேபோல் நிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ அதை தவிடுபொடியாக்க போகிறார் என்கிறார்கள்.

    English summary
    Canadian PM Justin Trudeau's liberal party may form the government with minority numbers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X