For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்".. ஆஹா.. "ஹேப்பி பொங்கல்" சொன்ன தமிழர்களே இதைப் படிங்கப்பா!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழில் பொங்கல் வாழ்த்து சொன்ன கனடா பிரதமர்-வீடியோ

    ஒட்டாவா: "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்ற அழகிய தமிழ் வார்த்தையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உதிர்க்க அது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

    கனடாவில் நிறைய தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும் எப்போதுமே இந்தியர்கள் மீது தனி பாசம்.

    அவர் இந்திய மற்றும் தமிழ்ப் பண்டிகைகளை கொண்டாடுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர். மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு குறிப்பாக இந்திய மக்களின் கலாச்சாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் அவருக்கு நம் நாட்டில் எக்கச்சக்க ஃபேன்ஸ்கள் உண்டு.

    குத்து விளக்கேற்றினார்

    குத்து விளக்கேற்றினார்

    2 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற தீபாவளிக்கு, கனடா தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி அந்த பண்டிகையை கொண்டாடினார்.

    வேட்டி சட்டை

    வேட்டி சட்டை

    அதேபோல, கடந்த பொங்கல் பண்டிகைக்கு, கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினார். எப்பவுமே கோட்-சூட்டுடன் இருக்கும் ஜஸ்டின், அன்று நம்முடைய பாரம்பர்ய உடையான வேட்டி சட்டைஅணிந்திருந்தார்.

    தமிழ் வணக்கம்

    தமிழ் வணக்கம்

    இந்த வருடமும் ஜஸ்டின் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். இது சம்பந்தமாக ஒரு வீடியோவையும் வெளியிட்டு உள்ளார். "வணக்கம்" என்று தமிழில் பேச்சை தொடங்குகிறார் ஜஸ்டின்.

    சர்க்கரை பொங்கல்

    பிறகு ஆங்கிலத்தில் தமிழர்களின் சிறப்பை எடுத்து கூறி இறுதியாக "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்" என்று மழலை தமிழிலேயே சொல்லி முடிக்கிறார். ஜஸ்டினின் இந்த சர்க்கரை பொங்கல் பேச்சு வைரலாகி வருகிறது. ஜஸ்டினின் தமிழ் வாழ்த்து கன்னல் கரும்பாக இனிக்கவே செய்யும்.

    English summary
    Canadian Prime minister Justin Trudeau's says Pongal Wishesin Tamil. This Video goes viral now.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X