For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புது வேலை.. கழுத்துல ஐடி கார்டு.. தெருநாய்க்கு அடித்த அதிர்ஷ்டம்.. ஏக்கப்பெருமூச்சு விடும் மக்கள்!

பிரேசில் நாட்டில் நாய் ஒன்று கார் விற்பனையகத்தின் விற்பனை பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

பிரேசிலியா: தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாயைத் தத்தெடுத்து, விற்பனை பிரதிநிதியாக நியமித்திருக்கிறது பிரேசிலில் இயங்கி வரும் கார் விற்பனையகம் ஒன்று.

இந்த உலகில் விநோதங்களும், ஆச்சரியங்களும் நிரம்பி இருக்கின்றன. 'ஏன் இப்படி செய்தார்கள்?', 'இது ஏன் இப்படி நடந்தது?' என்பது போன்ற கேள்விகளுடன் பல செய்திகளை நாம் கடந்து போயிருப்போம். அப்படிப்பட்ட செய்தி தான் இதுவும்.

இந்த சம்பவத்தின் நாயகன் டக்சன் பிரைம் எனும் தெரு நாய். பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சாண்டோ மாநிலத்தில் கார் விற்பனையகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த விற்பனையகத்திற்கு வெளியே தான் டக்சன் வாழ்ந்து வந்தான்.

முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்முதியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த ஓய்வூதியம் - லாக் டவுன் காலத்தில் வீடு தேடி வரும்

நல்ல நண்பன்

நல்ல நண்பன்

எந்நேரமும் அந்த கார் விற்பனையகத்தையே சுற்றிச் சுற்றி வந்த டக்சன், அதன் ஊழியர்களுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டான். இதனால் கார் விற்பனையகத்தின் ஊழியர்கள் டக்சனுக்கு நண்பர்களாகிவிட்டனர். இதையடுத்து டக்சனை அந்த கார் விற்பனையகம் தத்தெடுத்துக்கொண்டது.

விற்பனையாளர் வேலை

விற்பனையாளர் வேலை

அது மட்டுமல்லாமல் அதற்கு விற்பனையாளர் வேலையை கொடுத்து, டக்சனை தங்களில் ஒருவராகவே ஆக்கிக்கொண்டனர் கார் விற்பனையக ஊழியர்கள். டக்சன் தற்போது கழுத்தில் ஐடி கார்டுடன் ( அடையாள அட்டை) கார் விற்பனையகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறான்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

அந்த ஷோரூமுக்கு வரும் வாடிக்கையாளர்களை உற்சாகத்துடன் வரவேற்பது தான் டக்சனின் பணி. அதை மிக அழகாக செய்து வருகிறான் அவன். டக்சனின் வரவேற்பை பார்த்து, வாடிக்கையாளர்களும் உற்சாகமடைவதாக கூறுகிறார்கள் கார் விற்பனையக ஊழியர்கள்.

திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

'தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய்க்கு கிடைத்த வாழ்வை பாருங்களேன்' என ஏக்க பெருமூச்சு விடுபவர்களும் உண்டு. கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், கொரோனா ஊரடங்கால் பலரும் ஏற்கனவே பார்த்த வேலையை இழந்து வரும் வேளையில் இப்படி நாய்க்கெல்லாம் வேலை போட்டுத் தந்திருக்கிறார்களே என சம்பந்தப்பட்ட விற்பனையகத்தை சில நெட்டிசன்கள் திட்டியும் வருகின்றனர்.

English summary
A car showroom in Brazil have adopted and appointed a street dog as their sales executive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X