For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானத்தில் தோன்றிய கார் சைஸ் நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ.. என்ன பின்னணி?

ஆஸ்திரேலியாவில் வானத்தில் பெரிய நெருப்பு பந்து தோன்றிய விவகாரம் பெரிய வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வானத்தில் தோன்றிய மிகப்பெரிய நெருப்பு பந்து.. சிசிடிவியில் பதிவான பகீர் வீடியோ

    சிட்னி: ஆஸ்திரேலியாவில் வானத்தில் பெரிய நெருப்பு பந்து தோன்றிய விவகாரம் பெரிய வைரலாகி உள்ளது. இது என்ன பந்து என்று தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

    பொதுவாக வானத்தில் விண்கற்கள் தோன்றி மறைவது உண்டு. அதிக ஒளியுடன் தோன்றும் இந்த கற்கள் ஒரு சில நொடிகளில் மறைந்துவிடும். இது இயற்கையில் இயல்பாக நடக்க கூடிய விஷயம்தான்.

    Car-Sized Fireball hits a small town in Australia - Viral Video

    இந்த நிலையில்தான் தெற்கு ஆஸ்திரேலியாவில் நேற்று இரவு வானில் அதிசய ஒளி ஒன்று தோன்றியது. திடீர் என்று தோன்றிய பெரிய நெருப்பு ஒளி நொடிப்பொழுதில் வளர்ந்து கொண்டே சென்றது. இந்த ஒளி மிகவும் பிரகாசமாக இருந்ததாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பகுதியில் இருந்த மக்களும் கூட இதை நேரில் பார்த்து இருக்கிறார்கள். வேகமாக தரையை நோக்கி விழுந்த அந்த ஒளி கார் அளவிற்கு பெரிதானது. பின் மறைந்து மாயமானது.

    இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் நிறைய வெளியாகி இருக்கிறது. சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இது விண்கல்தான் என்று சிலர் தெரிவிக்கிறார்கள். அதே சமயம் இது விண்கல் கிடையாது, வேறு எதோ ஒரு பொருள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இந்த ஒளிக்கு காரணம் என்ன, இது விண்கல்லா இல்லையா என்று நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இவர்கள் இன்னும் சில நாட்களில் இது தொடர்பான விளக்கத்தை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Car-Sized Fireball hits a small town in Southern Australia - Viral Video.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X