For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2013ல் நாளொன்றுக்கு ரூ 254 கோடி சம்பாதித்த சூதாட்ட விடுதி அதிபர் அடெல்சன்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2013-ம் ஆண்டில் நாளொன்றுக்கு அதிகம் சம்பாதித்த நபராக சூதாட்ட விடுதிகள் நடத்தி வரும் அமெரிக்க தொழிலதிபர் அடெல்சனைத் தேர்வு செய்துள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை.

கடந்த 2013ம் ஆண்டு நாளொன்றுக்கு சராசரியாக அதிகம் சம்பாதித்த தொழிலதிபர்கள் குறித்த வித்தியாசமான பட்டியலை வெளியிட்டது போர்ப்ஸ் பத்திரிக்கை. அதில் சூதாட்ட விடுதி நடத்தி வரும் அடெல்சன் நாளொன்றுக்கு அதிகம் சம்பாதிக்கும் நபராகத் தேர்வாகியுள்ளார்.

இதன்மூலம், உலகின் முன்னணி கோடீஸ்வரரான வாரன் பப்பெட்டை அடெல்சன் முந்திவிட்டார் என்று கூறப்படுகிறது.

சூதாட்ட மையங்கள்....

சூதாட்ட மையங்கள்....

லாஸ் வேகாஸ், சீனாவின் மக்காவ் மற்றும் சிங்கப்பூரில் விதவிதமான சூதாட்ட மையங்களை தொடங்கி நடத்தி வரும் தொழிலதிபர் அடெல்சன்.

ஆர்வம்...

ஆர்வம்...

இவரது சூதாட்ட விளையாட்டுகளில் கலந்துகொள்ள உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் அந்த விடுதிகளுக்கு படையெடுக்கின்றனர். இதனால், கேசினோ சூதாட்ட விடுதிகளுக்கு இந்த ஆண்டு கொள்ளை லாபம் கிடைத்துள்ளது.

ஒரு நாள் வருமானம் ரூ 254 கோடி....

ஒரு நாள் வருமானம் ரூ 254 கோடி....

அதனையடுத்து, கேசினோ அதிபர் ஷெல்டன் அடெல்சனின் ஒரு நாளைய வருமானம் 254 கோடி ரூபாய் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

உயர்ந்த சொத்துமதிப்பு...

உயர்ந்த சொத்துமதிப்பு...

மேலும், கடந்தாண்டு மட்டும் 41 மில்லியன் டாலர் சம்பாதித்ததன் மூலம், கேசினோ அதிபரின் சொத்து மதிப்பு 37 பில்லியன் டாலர் ஆகியுள்ளதாம்.

அடுத்தடுத்த இடங்களில்...

அடுத்தடுத்த இடங்களில்...

இந்த பட்டியலில் பேஸ்புக் வலைதள அதிபர் மார்க் ஸுகெர்பெர்க் நாளொன்றுக்கு ரூ 230 கோடி வீதம் சம்பாதித்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் அமேசன் அதிபர் ஜெப் பெஸோஸ் பெற்றுள்ளார்.

10வது இடத்தில்...

10வது இடத்தில்...

இந்தப்பட்டியலில் நாளொன்றுக்கு ரூ 158 கோடி சம்பாதித்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 10வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
According to the Forbes magazine, Mr Adelson's net worth soared $15 billion in 2013 from his gambling properties in Las Vegas, Macau and Singapore, making him the billionaire who made the most money this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X