For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரியாக தரையிறங்கும் நேரத்தில் பில்டிங் மீது மோதியது.. வெளியான பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்

Google Oneindia Tamil News

கராச்சி: ஜின்னா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கராச்சியின் மாடல் காலனியில் நேற்று மாலை பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) பயணிகள் விமானம் 99 பேருடன் தரையில் விழுந்து நொறுங்கியது. விமான நிலையத்திற்கு 1 கி.மீ தூரம் கூட இல்லாத நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

Recommended Video

    பாகிஸ்தான் விமான விபத்தின் கோர காட்சிகள்

    இந்த விபத்தில் 97 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிந்து மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பி.கே 8303 இல் ஏ 320 ஏர்பஸ் 91 பயணிகளையும், 8 பணியாளர்களையும் லாகூரிலிருந்து கராச்சிக்கு ஏற்றிச் சென்றதாக பிஐஏ செய்தித் தொடர்பாளர் அப்துல்லா ஹபீஸ் தெரிவித்தார்.

    பாக்.: கராச்சியில் குடியிருப்புகள் மீது 107 பேருடன் விழுந்த விமானம்- பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்புபாக்.: கராச்சியில் குடியிருப்புகள் மீது 107 பேருடன் விழுந்த விமானம்- பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு

    இரு பயணிகள் தப்பினர்

    இரு பயணிகள் தப்பினர்

    "விமானம் முதலில் ஒரு மொபைல் கோபுரத்தைத் தாக்கி வீடுகளின் மீது மோதியது" என்று ஷகீல் அகமது என்பவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். சிந்து சுகாதார அமைச்சக, ஊடக ஒருங்கிணைப்பாளர் மீரன் யூசுப், கூறுகையில், இரண்டு பயணிகள் தப்பிப்பிழைத்து மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டதை உறுதிப்படுத்தினார். உயிர் தப்பியவர்கள் ஜுபைர் மற்றும் பஞ்சாப் வங்கியின் தலைவரான ஜாபர் மசூத் என தெரியவந்தது.

    பயணிகள் நிலைமை

    பயணிகள் நிலைமை

    "ஜுபைர் 35 சதவிகித தீக்காயங்களுடன் டாக்டர் ரூத் பஃபா சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அதே நேரத்தில் மசூத் உடலில் நான்கு பகுதிகளில், எலும்பு முறிவுகளுடன், தாருல் சேஹத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பாதிக்கப்பட்ட 19 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    விமானி கதறல்

    விமானி கதறல்

    விமானம் இரண்டாவது முறையாக தரையிறங்க முயற்சித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான கண்காணிப்பு இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட விபத்துக்கு முந்தைய இறுதி தருணங்களில், விமானிகளில் ஒருவர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரிடம் "மேடே, மேடே, மேடே" என்று கூறியுள்ளார். முன்னதாக, விமானத்தின் இரு இயந்திரங்களின் கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளதும் பதிவாகியுள்ளது.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    இந்த விமானம் முதலில் ஒரு மொபைல் கோபுரத்தைத் தாக்கி, மாடல் காலனிக்கு அருகிலுள்ள ஜின்னா கார்டன் பகுதியில் வீடுகள் மீது மோதியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட விமான போக்குவரத்தை, பாகிஸ்தான் கடந்த வாரம் மீண்டும் தொடங்கிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை பாருங்கள்.

    English summary
    Exclusive CCTV Footage of yesterday's Plane Crash Near Karachi Airport.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X