For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொருளாதாரம் நாசமாகிவிட்டது.. அதிகாரம் எல்லாம் ஒருத்தர் கையில் உள்ளது.. ரகுராம் ராஜன் பொளேர்!

அமெரிக்காவில் நடந்த கல்லூரி நிகழ்வு ஒன்றில் பேசிய முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: அமெரிக்காவில் நடந்த கல்லூரி நிகழ்வு ஒன்றில் பேசிய முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தற்போது ஆர்பிஐ அமைப்பிற்கும் மத்திய அரசுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஆர்பிஐ இயக்குனர் உர்ஜித் பட்டேலை மத்திய அரசு பதவி விலகி வற்புறுத்தும் நிலை கூட ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் கலிபோர்னியா பல்கலைக்கழத்தில் பேசிய முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசின் கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் எப்படி மோசம் அடைந்தது என்று கூறியுள்ளார்.

14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை மீது பாய்ந்தது போக்சோ 14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை மீது பாய்ந்தது போக்சோ

இந்திய பொருளாதாரம்

இந்திய பொருளாதாரம்

ரகுராம் ராஜன் தனது பேச்சில், இந்தியாவின் பொருளாதாரம் 2016க்கும் முன்பு வரை மிகவும் நன்றாக இருந்தது. இந்தியா மிக மிக வேகமாக வளர்ந்து வந்தது. 25 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியா மிக வேகமான வளர்ச்சியை சந்தித்து. அவ்வளவு வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா சந்தித்ததே கிடையாது.

வேகமாக குறைந்தது

வேகமாக குறைந்தது

ஆனால் 2016க்கு பின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக குறைந்தது. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நீக்கம்தான் இதற்கு காரணம். இந்த இரண்டும் கொண்டு வரப்பட்ட பின் இந்திய பொருளாதாரம் மொத்தமாக சாய்ந்தது. அதன்பின் தொடர்ந்து சரிந்து வருகிறது.

மத்திய அரசு

மத்திய அரசு

இந்தியாவில் எது நடக்க வேண்டும் என்றாலும் மத்திய அரசின் அனுமதியுடன் நடக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அது மிகவும் ஆபத்தான விஷயம் ஆகும். மத்திய அரசு மொத்தமாக மாநிலங்களை கட்டுப்படுத்த பார்க்கிறது. அது இந்தியாவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாக முடியும்.

பெரிய அதிகாரம்

பெரிய அதிகாரம்

முக்கியமாக இப்போது இருக்கும் மத்திய அரசு ஒருவரை மட்டுமே நம்பி இருக்கிறது. அவர் தனி அதிகாரம் கொண்ட நிறுவனங்களை கூட கட்டுப்படுத்த பார்க்கிறார். ஆர்பிஐ, சிபிஐ என்று எல்லோரையும் அவர் கட்டுப்படுத்த பார்க்கிறார். இது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

English summary
Centralization Of Power in single man hand is India's major problems: Raghuram Rajan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X