For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊழியர்கள் குழந்தைகளின் கல்லூரி டியூஷன் ஃபீஸை கட்டும் வித்தியாசமான சிஇஓ

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: நியூயார்க்கைச் சேர்ந்த ஆன்லைன் நிறுவனமான பாக்ஸ்ட்(Boxed)சிஇஓ சியே ஹுவாங் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களின் பிள்ளைகளின் கல்லூரி டியூஷன் செலவை ஏற்றுக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள நிறுவனம் பாக்ஸ்ட். ஆன்லைனில் மொத்தமாக வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது பாக்ஸ்ட். இந்நிலையில் தங்கள் நிறுவன ஊழியர்களை கவர என்ன செய்யலாம் என அந்நிறுவனத்தின் துணை நிறுவனரும், சிஇஓவுமான சியே ஹுவாங் யோசித்தார்.

CEO pays college tuition for all of his employees’ children

பிற அமெரிக்க நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பலவகை சலுகைகளை அளித்துள்ளன. இந்நிலையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும், அதே நேரம் அந்த சலுகையால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து நிறுவனத்தில் தங்கிவிட வேண்டும் என்று நினைத்தார் ஹுவாங்.

இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் கல்லூரி படிப்புக்கான செலவு அதிகம் என்பதும், அனைத்து ஊழியர்களாலும் அவ்வளவு செலவு செய்து குழந்தைகளை படிக்க வைக்க முடியாது என்பதும் தோன்றியது. உடனே அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளின் கல்லூரி டியூஷன் செலவை தான் ஏற்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

படிப்புக்கான செலவை அவர் தனது சொந்த பணத்தில் இருந்து அளித்து வருகிறார். ஹுவாங்கின் பெற்றோர் தைவானைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அமெரிக்காவில் குடியேறி தனது மகனை வளர்த்தனர். படிப்பு தான் வெற்றிக்கு முக்கியம் என்பதை உணர்ந்த ஹுவாங் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஃபோர்தம் சட்டப் பள்ளியில் படித்துள்ளார்.

அவர் முதன்முதலாக துவங்கிய கேமிங் ஸ்டுடியோ நிறுவனத்தை கடந்த 2011ம் ஆண்டு விற்றுவிட்டார். அதன் பிறகே பாக்ஸ்ட் நிறுவனத்தை துவங்கியுள்ளார்.

English summary
New York based company Boxed's CEO Huang is paying the college tuition for all of his employees' children.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X