For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபத்தான இடத்தில் உள்ளது.. விக்ரம் லேண்டருக்கு ரெட் சிக்னல்.. ஐரோப்பிய விண்வெளி மையம் அதிர்ச்சி!

நிலவில் விக்ரம் லேண்டர் மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    விக்ரம் லேண்டருக்கு ரெட் சிக்னல்.. ஐரோப்பிய விண்வெளி மையம் அதிர்ச்சி!

    லண்டன்: நிலவில் விக்ரம் லேண்டர் மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

    கடந்த சனிக்கிழமை அதிகாலை சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது. அதிகாலை 1.48 மணிக்கு சந்திரயான் 2ன் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்தது.

    இப்போது வரை அதை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தனர்.

    விக்ரம் லேண்டர் எப்படி

    விக்ரம் லேண்டர் எப்படி

    இந்த நிலையில் நிலவில் விக்ரம் லேண்டர் மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலவில் தென் துருவம் என்பது மிகவும் ஆபத்தான பகுதி ஆகும். அங்கு ஆராய்ச்சி செய்வதே மிகவும் கடினம். அதேபோல் அங்கு தரையிறங்கி, கருவிகளை வைத்து சோதனை செய்வதும் மிகவும் கடினம் ஆகும்.

    வெற்றி

    வெற்றி

    சந்திரயான் 2 இதில் முக்கால்வாசி வெற்றி அடைந்துவிட்டது.தென் பகுதியில் இருக்கும் விஷயங்களை கணிக்க முடியாது. அங்கு நிறைய ஆபத்துகள் இருக்கிறது. அங்கு காலநிலை என்பது மிக மிக மோசமாக இருக்கும். அங்கு எப்போது என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது.

    மாசுக்கள் எப்படி

    மாசுக்கள் எப்படி

    அதேபோல் அங்கு மாசுக்கள் அதிகமாக இருக்கிறது. இந்த மாசுக்கள் எப்போது வேண்டுமானாலும் விக்ரம் லேண்டரை பாதிக்க வாய்ப்புள்ளது. அங்கு இருக்கும் கருவிகளை பாதிக்க செய்யும். சந்திரயான் 2விற்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    சந்திரயான் 2 எப்படி

    சந்திரயான் 2 எப்படி

    சந்திரயான் 2 தற்போது இயங்கும் நிலையில் இருந்தாலும் கூட அந்த தூசுக்கள் பெரிய அளவில் அதில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புள்ளது. இந்த தூசுக்களை சமாளிக்கும் அளவிற்கு அதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

    English summary
    Chandrayaan 2: Vikram Lander may face hard situations in the moon says Europe Space Agency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X