For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரொம்ப இளசா, புதுசா, ஒரு தினுசா இருக்கே இந்த நிலா..!

Google Oneindia Tamil News

புளோரிடா: புளூட்டோவின் ஐந்து நிலவுகளில் பெரிய நிலவான சரோனின் புதிய புகைப்படத்தை நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம் அனுப்பி வைத்துள்ளது. நினைத்ததை விட இந்த நிலா மிக வித்தியாசமாக, இளமைப் பொலிவோடு காணப்படுவதாக நாசா கூறியுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் போய் இந்த நிலவைப் படம் பிடித்துள்ளது நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம்.

அதாவது சரோன் நிலவிலிருந்து 4 லட்சத்து 66 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலிருந்து படம் பிடித்துள்ளது. ஜூலை 13ம் தேதி இந்தப் படம் எடுக்கப்படடுள்ளது.

லாரி மூலம்

லாரி மூலம்

நியூ ஹாரிஸான்ஸ் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள லாரி என்ற (Long Range Reconnaissance Imager (LORRI) கேமரா மூலம் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பெரிய மலைகள், பள்ளத்தாக்குகள்

பெரிய மலைகள், பள்ளத்தாக்குகள்

சரோன் நிலவில் மிகப் பெரிய மலைகளும், சிகரங்களும், பள்ளத்தாக்குகளும் உள்ளன. நிலவின் மேல் பகுதியில் வலது புறம், 9 கிலோமீட்டர் ஆழம் கொண்ட மிகப் பெரிய பள்ளத்தாக்கு உள்ளது.

1000 கிலோமீட்டர் நீளம்

1000 கிலோமீட்டர் நீளம்

பள்ளத்தாக்குகள் 1000 கிலோமீட்டர் வரை நீண்டு கிடக்கின்றனவாம். சரோன் நிலவின் மையப் பகுதியானது பிளவுபட்டது போல காணப்படுகிறது.

கிரேட்டர்களைக் காணோமே

கிரேட்டர்களைக் காணோமே

சரோன் நிலவில் கிரேட்டர்கள் (craters) எதுவும் இல்லை. நிலவின் மையப் பகுதியின் தெற்கே கீழ்ப் பகுதியில், சமதளமாக உள்ளது. சூரியனின் வெளிச்சம் பட்டு அந்தப் பகுதி மிகத் தெளிவாகத் தெரிகிறது. இங்கு சில கிரேட்டர்கள் இருப்பது போலத் தெரிகிறது.

புதுசா இளசா...

புதுசா இளசா...

இந்த சமதளப் பரப்பைப் பார்க்கும்போது புத்தம் புதிதாக போடப்பட்ட தளம் போல அப்படி பளிச்சென காணப்படுகிறது. மண்ணியல் மாற்றம் காரணமாக இப்படித் தோன்றலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வட துருவம் இருளில்

வட துருவம் இருளில்

சரோன் நிலவின் வட துருவப் பகுதியில், இருளடைந்து காணப்படுகிறது. அங்கு கரும்படலம் சேர்ந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்தப் பகுதியை மேலும் தெளிவாக எடுத்த புகைப்படங்களுக்காக விஞ்ஞானிகள் காத்துள்ளனர். அது வந்தால் இந்தப் பகுதி குறித்த விவரமும் தெரிய வரும்.

கம்ப்ரஸ் செய்யப்பட்ட படங்கள்

கம்ப்ரஸ் செய்யப்பட்ட படங்கள்

இந்தப் படங்களை எடுத்த நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம், இவற்றை பூமிக்கு அனுப்புவதற்கு வசதியாக கம்ப்ரஸ் செய்து அனுப்பியுள்ளது. எனவே படங்களில் பெரிய அளவில் தெளிவு இல்லை. அதேசமயம், கம்ப்ரஸ் செய்யப்படாத ஒரிஜினல் படங்கள் இன்னும் நியூ ஹாரிஸான்ஸில் உள்ள கம்ப்யூட்டர் மெமரியில் உள்ளன. அவற்றை விரைவில் விஞ்ஞானிகள் பெறுவார்கள்.

3 கோடி மைல் தூரத்தைக் கடந்து

3 கோடி மைல் தூரத்தைக் கடந்து

3 கோடி மைல் தூரத்தைக் கடந்து புளூட்டோவை சென்றடைந்த நியூ ஹாரிஸான்ஸ் விண்கலம், கிரகத்தை சுற்றி வந்து படங்களை எடுத்துக் குவித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். அந்தப் படங்கள்தான் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

English summary
Remarkable new details of Pluto’s largest moon Charon are revealed in this image from New Horizons’ Long Range Reconnaissance Imager (LORRI), taken late on July 13, 2015 from a distance of 289,000 miles (466,000 kilometers). A swath of cliffs and troughs stretches about 600 miles (1,000 kilometers) from left to right, suggesting widespread fracturing of Charon’s crust, likely a result of internal processes. At upper right, along the moon’s curving edge, is a canyon estimated to be 4 to 6 miles (7 to 9 kilometers) deep.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X