For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விக் விக் பென்குவின்.. டைவ் அடிக்கும் டால்பின்.. கண் கவர் சிகாகோ அக்வாரியம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கண் கவர் சிகாகோ ஷெடட் அக்வாரியம்!-வீடியோ

    சிகாகோ: சிகாகோ நகரில் அமைந்திருக்கும் ஷெடட் அக்வாரியம் தான் நாம இன்னைக்கு பார்க்க போகிற இடம். வாங்க பார்க்கலாம்.

    அக்வாரியம் என்றால் அது வீட்டில் இருக்கும் சின்ன மீன் தொட்டி என்றாலும் சரி பெரிய கட்டடங்களுக்குள் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மீன் தொட்டிகள் என்றாலும் சரி பார்க்க அப்படி ஆசையாக இருக்கும். துள்ளும் மீன்களையும், அதன் கண்களையும் பார்த்தாலே மெய் சிலிர்க்கும்.

    அக்வாரியம் பிடிக்காத ஆட்களே கிடையாது. மீன் சாப்பிடாத சைவக்கார்கள் உண்டு. ஆனால் அந்த குட்டி வாலை ஆட்டி ஆட்டி நீந்தும் மீன்களை ரசிக்காத கண்கள் கிடையாது தானே. அப்படி ஒரு வண்ண மயமான ஷெடட் அக்வாரியத்தின் அழகை தான் இங்கே பார்க்க போறீங்க.

     எப்படி பிறந்தது

    எப்படி பிறந்தது

    அமெரிக்காவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான சிகாகோ நகரில் அமைந்திருப்பது தான் ஷெடட் அக்வாரியம். ஜான் ஷெடட் என்பவரின் அன்பளிப்பிலும் முயற்சியிலும் இந்த அக்வாரியம் கட்டப்பட்ட காரணத்தால தான் இதற்கு ஜான் ஷெடட் அக்வாரியம் ன்னு பெயர் சூட்டி இருக்காங்க. இந்த ஷெடட் அக்வாரியம் கட்ட ஆரம்பித்த காலத்தில் அதற்கான வரைபடம் முடிகிற தருவாயில் அவர் இறந்து விட்டார். அப்புறம் அவரது மனைவி பொறுப்பில் எல்லாம் நடந்தேற அவங்க மனைவி தான் 1930 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி இதை திறந்து வைச்சாங்க.

     உலகிலேயே மிக பெரிய அக்வாரியம்

    உலகிலேயே மிக பெரிய அக்வாரியம்

    இந்த ஷெடட் அக்வாரியம் சிறப்பு என்னன்னா அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில அது தான் உலகிலே மிக பெரிய அக்வாரியம் ஆக இருந்திருக்கு. அப்போ மட்டும் இல்லங்க ரொம்ப காலமாகவே அது தான் நம்பர் 1 இடத்தில இருந்திருக்கு. அப்புறம் காலப்போக்கில் மிக பெரிய அக்வாரியம் எல்லாம் வந்து விட்டாலும் இப்போதும் உலகின் முதல் பத்து பெரிய அக்வாரியம் லிஸ்ட்ல ஷெடட் அக்வாரியம் இன்னமும் இருக்கு. அது கட்டப்பட்ட 1930 களிலேயே அதை கட்டி முடிக்க எவ்வளவு செலவு ஆச்சு தெரியுமா ? 30,00,000 டாலராம்.

     சிறப்பம்சங்கள் என்னென்ன

    சிறப்பம்சங்கள் என்னென்ன

    இந்த ஷெடட் அக்வாரியம் சிறப்பு அம்சங்கள் என்னன்னு பாத்தீங்கன்னா இங்க மீன் தொட்டிகளில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீர் எல்லாம் கடல் தண்ணீர் தான். அங்குள்ள மொத்த தண்ணீர் அளவு 5,000,000 US காலோன்ஸ் னா பாத்துக்கோங்க. 3டி இல்ல அதை தாண்டி 4டி தியேட்டர் காட்சிகளும் உண்டு இங்கே. 4டி அனுபவத்தில் கடல் உயிரினங்களோடு இருந்து வரும் அனுபவத்தின் சுகம் அலாதி தான்.

    அப்பப்பா எல்லாமே உண்டு இங்கே

    இங்கு மீன்கள் மட்டுமல்ல வகை வகையாய் நண்டு, கடல் குதிரை, ஆமை வகைகள், கடற் குதிரை, கடல் சிங்கம் என்று எல்லாமே உண்டு. பல வகையான பாம்பு வகைகள், ஸ்டார் பிஷ், ஆக்டோபஸ் என்று நீண்டு கொண்டே போகிறது அந்த லிஸ்ட. குவிந்து குவிந்து நடந்து போகும் பென்குவின் முதல் தண்ணீரில் குதித்து குதித்து டைவ் அடிக்கும் டால்பின் என்று எல்லப் பக்கமும் கண்களுக்கு குளிர்ச்சி தான். ஸ்டிங் ரே எனப்படும் மீன் வகைகளை நாம் கை கொண்டு முதுகு வருடும் "டச் தி ஸ்டிங் ரே" அனுபவமும் உண்டு. அந்த அழகான அனுபவத்தின் வீடியோ உங்களுக்காக இங்கே.

    சிகாகோ போகும் வாய்ப்பிருந்தா.. மறக்காம ஒரு எட்டு இந்த அக்வாரியம் போய்ட்டு வாங்க.. அந்த அழகிய மீன்களோடும் கடல் வாழ் உயிரினங்களோடும் உங்க நாளை கொண்டாடுங்க.

    - Inkpena சஹாயா

    English summary
    If you visit Chicago dont forget to go to this Famous Shedd Aquarium with your kids and family. An amaing place to visit without fail.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X