For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னடா இது சீனாவுக்கு வந்த சோதனை.. பிரேசிலிலிருந்து வந்த சிக்கனில் கொரோனா.. பரபரப்பு!

Google Oneindia Tamil News

பீஜிங்: பிரேசில் நாட்டில் இருந்து சீனாவின் ஷென்சென் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட, குளிர்சாதானப் பெட்டியில் வைத்து கொண்டு வரப்பட்ட கோழி இறைச்சியை பரிசோதனை செய்ததில் கொரோன வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் மாகாணத்தில் இருக்கும் கடல் மாமிச உணவுக்கான மார்க்கெட்டில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்று கூறப்பட்டது. இது உலக அளவில் இன்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, உலகமே இன்று முடங்கிப் போய் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும், கடல்சார் மாமிச உணவுகளை சீன அரசாங்கம் சோதித்துப் பார்க்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

Chicken wings imported from Brazil tested for coronavirus positive says China

அப்படி சீனாவின் ஷென்சென் நகருக்கு பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, குளிர்சாதானப் பெட்டியில் வைத்து கொண்டு வரப்பட்ட கோழி இறைச்சி பரிசோதிக்கப்பட்டன. அப்போது கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த மாமிசத்தை இறக்குமதி செய்த தொழிலாளர்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். மேலும், அருகில் உணவு வைக்கப்பட்டு இருக்கும் கூடாரங்களிலும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று ஷென்சென் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடல் சார் மாமிச உணவுகள் மற்றும் விலங்குகளின் மாமிச உணவுகளை இறக்குமதி செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். தொற்று நோயை தவிர்க்க முறையாக சோதித்துப் பார்க்க வேண்டும் என்று ஷென்சென் நகர தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு தலைமை அலுவலகம் எச்சரித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்

சீனா கடந்த புதன்கிழமை வெளியிட்டு இருந்த தகவலில், ஈகுவேடாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறாலில் கொரோனா வைரஸ் இருந்ததாக தெரிவித்து இருந்தது. இதேபோல் சீனாவின் மற்ற நகரங்களில் இருந்தும் இதேபோன்ற குற்றச்சாட்டை வைத்து இருந்தனர். இதைத் தவிர்க்கவே பல நாடுகளில் இருந்து கடல் சார் மாமிச உணவுகளை இறக்குமதி செய்வதற்கு சீனா தடை விதித்துள்ளது.

உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பொருள் அடைக்கப்பட்ட பாக்கெட்டுக்குள் கொரோனா வைரஸால் நுழைய முடியும். ஆனால், இந்த வைரஸால் அறையின் சீதோஷண நிலையில் நீண்ட நேரம் உயிர் வாழ முடியாது. ஆனால், குளிர்சாதனப் பெட்டியில் இருக்கும் உணவில் இருந்து எளிதில் கொரோனா வைரஸ் பரவும் தன்மை கொண்டது என்று தொற்று நோய் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Chicken wings imported from Brazil tested for coronavirus positive says China
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X