For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"புலிக்குட்டிகள்" விளையாட சிங்கக் குட்டிகளை வாங்கித் தந்த காஸா தாத்தா...!

Google Oneindia Tamil News

காஸா : பாலஸ்தீனத்தின் காஸாவில் வாழும் குடும்பம் ஒன்று, செல்லப்பிராணியாக வளர்க்க இரண்டு சிங்கக்குட்டிகளை வாங்கியுள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கிடையிலான எல்லைப்பகுதியான காஸாவில் உள்ள ரஃபா நகரில் வசித்து வருகிறார் சயிட் எல்டின் அல் - ஜமால் (54 ). இவருக்கு சிறுவயது முதலே சிங்கங்களை வீட்டில் வளர்க்க வேண்டும் என்பது ஆசையாம்.

இந்நிலையில், சமீபத்தில் அப்பகுதியில் உள்ள வனவிலங்கு காப்பகத்திற்கு சென்று இரண்டு சிங்கக் குட்டிகளை விலை கொடுத்து வாங்கினார். தற்போது இரண்டரை மாதக் குட்டிகளாக இருக்கும் அந்த இரண்டு சிங்கங்களும் ஜமாலின் பேரப்பிள்ளைகளோடு நன்றாக விளையாடுகிறது.

இன்னும் கொஞ்ச நாட்களில் சிங்கக்குட்டிகள் வளர்ந்து விட்டால், அவற்றிற்கு ரத்த வெறி ஏற்படுவது இயல்பு தான் எனத் தெரிவித்துள்ள ஜமால், பின்னர் அவற்றை கூண்டில் அடைத்து வைக்க திட்டமிட்டுள்ளாராம். காஸாவில் இருக்கும் யாராவது வாடகைக்கு கேட்டால் இவற்றை காட்சிப் பொருளாக வாடகைக்கு விடலாமா? எனவும் அவர் யோசித்து வருகிறாராம்.

இதற்கிடையே ஜமாலின் பேரப்பிள்ளைகள் சிங்கக்குட்டிகளோடு விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இளங்கன்று பயமறியாது என்பதை மெய்ப்பிப்பது போல் அந்த புகைப்படங்கள் உள்ளன.

English summary
Palestinian refugee Saad al-Jamal had long dreamed of owning a pet lion. He has realised his lifetime ambition by acquiring two lion cubs. He said he bought the two-month-old cubs from the Rafah Zoo. The cubs' parents are believed to have been smuggled into Gaza through a tunnel along the border with Egypt nearly three years ago
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X