For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஜன்னல் வழியே தூக்கிப் போட்டு... கம்பளியில் பிடித்து” - தீப்பிடித்த பள்ளி; காப்பற்றப்பட்ட குழந்தைகள்

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனாவில் கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்ததில் குழந்தைகளை ஜன்னல் வழியாக கீழே இறக்கி புத்திசாலித் தனமாக காப்பாற்றினர் பணியாளர்கள்.

சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள நின்ங்டே நகரில் உள்ள மழலையர் பள்ளி கட்டிடத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தீயிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஜன்னல் வழியே அவர்களை தூக்கி எறிந்தனர்.

இந்த மழலையர் பள்ளிக் கட்டிடத்துக்கு கீழே இருந்த காகிதப் பூக்கடையில் ஏற்பட்ட தீ பரவத் தொடங்கியதால் இந்த கட்டிடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துகொண்டது. இதையடுத்து அந்த கட்டிடத்தின் குடியிருப்பில் இருந்த மக்கள் அதன் கீழே பெரிய கம்பளியைப் பிடித்துக்கொண்டனர்.

இந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் குழந்தைகளை பள்ளியில் ஜன்னல் வழியே கம்பளி மீது எறிந்தனர். இந்த வகையில் சுமார் 300 குழந்தைகளுக்கும் மேல் காப்பாற்றப்பட்டனர்.

இவர்களில் சுமார் 92 குழந்தைகளும், 12 பெரியவர்களும், தீயின் பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டாலும், இயல்நிலைக்கு வராததால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் வெறும் அரை மணி நேரத்தில் உயிர்சேதமின்றி, இந்த கட்டிடத்தில் பரவியிருந்த தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Children attending a kindergarten in eastern China were thrown to safety from their first-floor nursery school after a fire broke out in the building in eastern China, according to a news website report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X