For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க குழந்தைங்க பேசவே பயப்படறாங்களா?- அப்போ ஒரு செல்ல நாய்க்குட்டி வாங்கி குடுங்க போதும்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: செல்ல நாய்களை வளர்ப்பதே நம்முடைய குழந்தைகளின் தயக்கம், மன உளைச்சலுக்கு சிறந்த மருந்து என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் குழந்தைகளுக்கு தயக்கம் அல்லது பயத்திற்கு சரியான மருந்து செல்லநாய்கள்தான் என சமீபத்திய ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆறு முதல் ஏழு வயதுள்ள 643 குழந்தைகளிடையே நடத்திய இந்த ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது.

உடல் நலம் சார்ந்த தகவல்கள்:

உடல் நலம் சார்ந்த தகவல்கள்:

இந்தக் குழந்தைகளின் உடல் நலம், தினசரி பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

குறைவான பதட்டம்:

குறைவான பதட்டம்:

இவர்களில் சுமார் 58 சதவிகிதம் குழந்தைகள் தமது இல்லங்களில் நாய் வளர்த்து வந்தனர். நாய் வளர்க்கும் குழந்தைகளில் 12 சதவிகிதம் பேரும், நாய் இல்லாத குழந்தைகளில் 21 சதவிகிதம் பேரும் பதட்டப்படுவது தெரியவந்துள்ளது.

குறும்பு செய்யும் நாய்கள்:

குறும்பு செய்யும் நாய்கள்:

குறும்பு செய்யும் நாயுடன் வளரும் குழந்தைகள் அதனுடன் விளையாடுவதாலும், பேசுவதாலும் மன அழுத்தத்துக்கு ஆளாவதில்லை. இதுவே, அவர்கள் புதிய மனிதர்களுடன் பேசும்போது பதட்டம் ஏற்படாமல் இருக்க காரணமாக அமைவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பதட்டப்படாத குழந்தைகள்:

பதட்டப்படாத குழந்தைகள்:

இதுபோன்று நாயுடன் வளரும் குழந்தைகள், வளர்ந்த பின்னரும் பொது இடங்களில் பதட்டப்படாமல் நடந்துகொள்வர் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

English summary
Childhood mental illness and obesity are significant public health concerns in the US. Since they start in childhood, preventive and early intervention approaches are needed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X