For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா.. இறந்தவர்களையும் குணமடைந்தோர் பட்டியலில் சேர்த்த சிலி.. காரணத்தை கேட்டால் கிர்ர்ர்ங்குதே!

Google Oneindia Tamil News

சண்டியாகோ: தென் அமெரிக்காவின் சிலியில் கொரோனாவால் இறந்தவர்களையும் குணமடைந்தோர் பட்டியலில் சேர்த்து அதற்கு அதிர வைக்கும் ஒரு காரணத்தையும் கூறி வருகிறார்கள்.

Recommended Video

    மக்களிடம் உண்மைகளை மறைத்த சீன அரசு... வெளியான தகவல்

    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 1,37,078 ஆக உள்ளது. அது போல் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3.26 லட்சமாக உள்ளது.

    குணமடைந்தோர் என்றால் முதலில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாசிட்டிவ் என இருக்கும். பிறகு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் அடையும்.

    ஆலோசனை

    ஆலோசனை

    பின்னர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் மீண்டும் சேகரிக்கப்படும். அதில் நெகட்டிவ் என வந்தவுடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு மீண்டும் எடுக்கப்படுகிறது. அப்போதும் நெகட்டிவ் என வந்தால் மட்டுமே அந்த நோயாளி குணமடைந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டு உரிய ஆலோசனைகளுடன் வீடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

    பாதிப்பு

    பாதிப்பு

    கொரோனா கொடுமையானது என்றால் அதிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கையே அந்தந்த நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். அமெரிக்காவில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.39 லட்சமாக உள்ளது.

    குணமடைந்தோர் பட்டியல்

    குணமடைந்தோர் பட்டியல்

    இந்த பாதிப்பு பட்டியலில் அடுத்தடுத்து இத்தாலி, ஸ்பெயின் ஆகியன உள்ளது. எனினும் இதன் உயிரிழப்பு விகிதங்கள் குறைந்தே வருகின்றன. இந்த நிலையில் தென் அமெரிக்காவின் சிலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குணமடைந்தோரின் பட்டியலில் சேர்க்கும் நிலை உள்ளது.

    குணமடைந்தோர்

    குணமடைந்தோர்

    இந்த அதிர்ச்சிகரமான விஷயம் குறித்து கேட்டால் அதற்கு அவர்கள் ஒரு கிருகிருக்க வைக்கும் காரணத்தையும் அவர்கள் கூறுகிறார்கள். இந்த சிலியில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி மார்ச் 3 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டார். இங்கு இதுவரை 7900 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 பேர் உயிரிழந்துவிட்டார்கள். 2,646 பேர் "குணமடைந்துவிட்டதாக" சிலி கூறுகிறது.

    அதிர வைக்கும் காரணம்

    அதிர வைக்கும் காரணம்

    சிலியின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜெய்மே மனலிச் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா பாதித்து இறந்தவர்கள் மூலம் வேறு யாருக்கும் தொற்று பரவாது. அவர்களுடைய நோய்த் தொற்று அவர்களோடு போய்விடுகிறது. அதனால் இறந்தவர்களும் குணமடைந்தவர்கள் பட்டியலில் வருவார்கள் என கூறி அதிரவைக்கிறார் மனலிச். அத்துடன் இறந்தவர்களையும் குணமடைந்தோர் பட்டியலில் சேர்ப்பது சர்வதேச நிபுணர்களின் பரிந்துரையின் பேரிலேயே செய்வதாக மனலிச் தெரிவித்துள்ளார்.

    English summary
    Chile is counting the deaths as recovered coronav patients as it also says a reason that it will not spread further from them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X