For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஸா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு: இஸ்ரேலுக்கான தூதர்களை திரும்ப பெற்றது சிலி, பெரு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல் அவிவ்: காஸா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களைக் கண்டித்து அந்நாட்டுக்கான தூதர்களை சிலி மற்றும் பெரு ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகள் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளன.

பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை உலக நாடுகள் வன்மையாக கண்டித்தும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. ஆனால் எதனையும் காதில் போட்டுக் கொள்ளாமல் கண்மூடித்தனமாக பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீனர்களை வேட்டையாடி வருகிறது.

இதனால் இஸ்ரேலுக்கும் பிற நாடுகளுக்கும் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குமான உறவு சீர்குலைந்து வருகிறது.

Chile and Peru recall Israel envoys over Gaza operation

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நாடுகள்..

  • காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பிரேசில் மற்றும் ஈகுவடார் ஆகிய நாடுகள் தங்களது தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்டது.
  • இஸ்ரேலை வெறிபிடித்த நாய் என்றும் கொடூர ஓநாய் என்றும் ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா கொமேனி கடுமையாக சாடினார்.
  • தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி, இஸ்ரேலின் காஸா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதர நாடுகளைப் பின்பற்றி தமது நாட்டுக்கான தூதரை திரும்ப அழைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
  • இதேபோல் பெரு வெளியுறவுத் துறை அமைச்சகமும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலுக்கான தூதரை திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் பெரு நாடும் அறிவித்திருக்கிறது.


English summary
The war in Gaza has led to a serious crisis in Israel's relations with Latin America. The foreign ministries of Chile and Peru have announced they are calling their ambassadors in Tel Aviv in consultation to protest Israel's operation against Hamas in the Gaza Strip.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X