For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

‘என்னையா படம் புடிக்கிற’...? கேமராவோடு பறந்த குட்டிவிமானத்தை குச்சியால் விளாசிய சிம்பன்சி!

Google Oneindia Tamil News

ஆம்ஸ்டர்டாம் : நெதர்லாந்து உயிரியல் பூங்காவில் சிம்பன்சி ஒன்று தன்னைப் படமெடுத்த கேமராவுடன் கூடிய ஆளில்லாத குட்டி விமானத்தை குச்சியால் அடித்து வீழ்த்திய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தில் உள்ள ராயல் பர்கர்'ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள குரங்குகளைப் படமெடுக்க ஆள் இல்லாத விமானத்தில் கேமரா ஒன்று கட்டப் பட்டு பறக்க விடப்பட்டது. அந்த குட்டி விமானமும் பறந்து பறந்து குரங்குகளைப் படமெடுத்தது. குட்டி விமானம் ஒன்று பறப்பதைப் பற்றிக் கவலைப் படாமல் மற்ற குரங்குகள் செவ்வனே தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன.

Chimpanzee knocks drone out of sky with stick in Netherlands zoo

ஆனால், ஒரே ஒரு சிம்பன்சி மட்டும் குட்டி விமானம் ஒன்று தங்களையே சுற்றிச் சுற்றி வருவதைக் கவனித்துள்ளது. பின்னர் சரியான கணித்து குட்டி விமானத்திற்கு நேராக சென்று, ஹீரோவைப் போல குச்சி ஒன்றால் அதன் தலையில் ஒரு தட்டு தட்டுகிறது.

பாவம் சிம்பன்சியின் குச்சியால் அடி வாங்கிய குட்டி விமானம், பல பல்டி அடித்து தரையில் வந்து விழுகிறது. அப்படியும் அடித்த சிம்பன்சி விடவில்லை. மரத்திலிருந்து கீழே இறங்கி வந்து, தான் அடித்த விமானத்தை ஆராய்ச்சி செய்கிறது.

இதில், ஆச்சர்யப் பட வேண்டிய விசயம் குட்டி விமானத்தில் கட்டப் பட்டிருந்த கேமராவில் இந்தக் காட்சிகள் அனைத்து பதிவாகியிருந்தது. ஆனால், அந்த குட்டி விமானம் தான் முழுவதும் சேதாரம் அடைந்து, இனி பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகி விட்டதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோ யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதனை இதுவரை சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

English summary
A camera-shy chimp batted a drone out of the sky after it came a little too close for comfort. The surly simian used a big stick to smash the gadget to the ground as it soared over his enclosure at the Royal Burgers' Zoo in the Netherlands on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X