For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென பின்வாங்கிய சீனா.. மனம்மாறிய ஜிங்பிங்.. ஹு விசாரணைக்கு ஒத்துழைப்பு.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உலக சுகாதார மையம் நடத்த போகும் விசாரணைக்கு ஆதரவு அளிப்போம் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    India joins 62 nations to seek probe into outbreak of coronavirus

    நேற்று உலக சுகாதார மையத்தின் 73வது உலக சுகாதார கூட்டம் நடைபெற்றது. உலக சுகாதார மையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டது. இந்த கூட்டத்தில் கொரோனாவின் தோற்றம் குறித்தும் அதன் தொடக்க பரவல் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா பரவலின் தோற்றம் குறித்தும், தொடக்க காலத்தில் அதன் பரவலை கையாண்ட விதம் குறித்தும் விசாரிக்க போவதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட 160 நாடுகளின் அழுத்தம் காரணமாக உலக சுகாதார மையம் இந்த முடிவை எடுத்துள்ளது .

    விஐபிக்களின் மனைவிகளையும் வளைத்த காசி.. வெளியான பெண்ணின் நிர்வாண படம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!விஐபிக்களின் மனைவிகளையும் வளைத்த காசி.. வெளியான பெண்ணின் நிர்வாண படம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!

    சீனா ஒப்புக்கொண்டது

    சீனா ஒப்புக்கொண்டது

    இந்த நிலையில் புதிய திருப்பமாக கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உலக சுகாதார மையம் நடத்த போகும் விசாரணைக்கு ஆதரவு அளிப்போம் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த உலக சுகாதார கூட்டத்தில் பேசிய ஜிங்பிங், கொரோனாவிற்கு எதிராக வலி மிகுந்த முடிவுகளை நாங்கள் எடுத்தோம். நிறைய தியாகங்களை இதில் செய்தோம். எங்களுக்கு எதிராக வந்த அலையை வெற்றிகொண்டு நாங்கள் எங்கள் மக்களை காப்பாற்றினோம்.

    வெளிப்படைத்தன்மை

    வெளிப்படைத்தன்மை

    இந்த வைரஸ் தாக்குதல் குறித்த விஷயங்களில் நாங்கள் நேர்மையாக செயல்பட்டோம். வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டோம். இதில் நாங்கள் பொறுப்புடன் இருந்தோம். இந்த வைரஸ் உலகம் முழுக்க 3 லட்சம் பேரை பலி வாங்கி உள்ளது. இதை தொடக்கத்தில் இருந்து தடுக்க தேவையான விஷயங்களை செய்து வருகிறோம்.

    உலக சுகாதார மையம் தகவல்

    உலக சுகாதார மையம் தகவல்

    உலக சுகாதார மையத்திற்கு எங்களால் முடிந்த விஷயங்கள் அனைத்தையும் பகிர்ந்து கொண்டோம். நாங்கள்தான் கொரோனாவின் ஜீனோம் குறித்த தகவலை முதலில் வேகமாக பகிர்ந்தோம். இதை எப்படி கட்டுப்படுத்துவது. எப்படி நோய்க்கு சிகிச்சை அளிப்பது என்று தொடக்கத்திலேயே கூறினோம். எங்களால் முடிந்த அனைத்தையும், எங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் நாங்கள் செய்தோம்.

    ஆதரவு அளிப்போம்

    ஆதரவு அளிப்போம்

    கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து உலக சுகாதார மையம் நடத்த போகும் விசாரணைக்கு ஆதரவு அளிப்போம். இந்த விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும். கொரோனா பாதிப்பு நீங்கியதும் இந்த விசாரணையை நடத்த வேண்டும். நம்முடைய உடனடி குறிக்கோள் மக்களை காப்பது மட்டுமே. உலக சுகாதார மையத்திற்கு நாங்கள் 2 பில்லியன் டாலர் கொடுக்கிறோம். கொரோனா தடுப்பு பணிக்கு இது உதவும், என்று ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார்.

    English summary
    China accepts the Comprehensive investigation on Coronavirus origin by WHO after pandemic ends.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X