For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸை வுகானில் பரப்பியது அமெரிக்க ராணுவம்தான்.. பகீர் குற்றச்சாட்டை அளித்த சீனா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அமெரிக்க ராணுவம்தான் காரணம் என சீன நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரி பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

Recommended Video

    சீனாவில் கொரோனா பரவ அமெரிக்க ராணுவம் தான் காரணம்... பகீர் குற்றச்சாட்டு

    சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா எனும் உயிர் கொல்லி வைரஸ் பரவியது. முதலில் சீனாவில் மட்டுமே பரவிய இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு சென்றவர்கள் மூலம் வேறு நாட்டினருக்கு, அவர்கள் மூலம் இன்னொரு நாட்டினருக்கு என பரவி வருகிறது.

    சீனாவில் மட்டும் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். உலகம் முழுவதும் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமெரிக்க ராணுவம்

    அமெரிக்க ராணுவம்

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து போர் கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து அங்கு கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. எனினும் மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஸோ லிஜியான் கூறுகையில் அமெரிக்க ராணுவம் தான் சீனாவில் கொரோனா வைரஸை பரவ வைத்துள்ளனர்.

    நிச்சயம்

    நிச்சயம்

    இதுகுறித்து அவர் மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது? எந்தெந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்? இந்த வைரஸை வுகானுக்கு அமெரிக்க ராணுவம்தான் பரவியிருக்கும். இந்த தகவலை வெளிப்படையாக தெரிவியுங்கள். இது தொடர்பாக எங்களுக்கு நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    வாடிக்கைதானே

    வாடிக்கைதானே

    இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில் தகவலை திரித்து கூறுவது கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் நாட்டுக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த ஆண்டு ஹாங்காங்கில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டமும் அமெரிக்க அரசு தூண்டுதல் பேரில் நடந்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பதிலடி

    கொரோனா வைரஸை சீனாவே பரவிவிடுவதாக மற்ற நாடுகள் கருதி வந்தன. இந்த நிலையில் சீனாவோ தன் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் மீது இத்தகைய குற்றச்சாட்டை சீனா பகிரங்கமாக பரவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிச்சயம் பதிலடி கொடுப்பார் என தெரிகிறது.

    English summary
    China External affairs minister accuses American troops are the main reason for spreading Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X