For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதிர்ப்புகளை மீறி தலாய் லாமாவைச் சந்தித்த ஒபாமா: அமெரிக்க தூதரை அழைத்து சீனா கண்டனம்

Google Oneindia Tamil News

பீஜிங்: அமெரிக்க அதிபர் ஒபாமா - புத்தமதத் தலைவர் தலாய் லாமா சந்திப்புக்கு சீனா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தை மீட்பதற்காக உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள் திபெத்தியர்கள். இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இதுவரை ஏராளமான புத்த துறவிகள் தீக்குளித்துள்ளார்கள்.

இதற்கிடையே, திபெத் புத்தமத தலைவரான தலாய் லாமா வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சந்தித்துப் பேச திட்டமிட்டார். இதற்கு சீனா தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.

China accuses US of meddling after Barack Obama-Dalai Lama meeting

இது தொடர்பாக சீன வெளியுறவு அதிகாரி ஹூ வா ஹூனாயிங் வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவுக்கு எதிரான மன உணர்வு கொண்ட தலாய்லாமாவை ஒபாமா சந்திக்க முடிவு செய்திருப்பது எங்களை மிகவும் பாதிக்க கூடியது. இதனால் இரு நாடுகள் இடையிலான நல்லுறவில் பெரிய தீங்கை ஏற்படுத்தும்' எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், சீனாவின் வேண்டுகோளையும் மீறி தலாய் லாமாவைச் சந்தித்தார் ஒபாமா. இந்தச் சந்திப்பால் ஆத்திரமடைந்த சீனா, இது தொடர்பாக பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரக வெளியுறவு அதிகாரி டேனியல் கிறிதென்பிரிங்கை அழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

ஒபாமாவை தலாய் லாமா சந்திப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
China on Saturday accused the United States of meddling in its domestic affairs after President Barack Obama met the Dalai Lama at the White House, and said it is up to Washington to take steps to avoid further damaging ties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X