For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

களமிறக்கப்பட்ட நவீன ஆயுதங்கள்.. இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியா மற்றும் சீனா எல்லையில் இரண்டு நாட்டு ராணுவமும் மாறி மாறி படைகளை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இரண்டு நாட்டு படைகளும் தங்கள் எல்லையில் நவீன ஆயுதங்களை குவித்து வருகிறது.

Recommended Video

    இந்தியா - சீனா எல்லையில் குவிக்கப்படும் படைகள்.. சாட்டிலைட் ஆதாரம்!

    இந்தியா மற்றும் சீனா இடையிலான சண்டை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த மாதம் ஐந்தாம் தேதி சிக்கிம் எல்லையில் தொடங்கிய சிறிய மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிக்கிம் எல்லையில் இரண்டு நாட்டு படைகளுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பு தற்போது இரண்டு நாட்டு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

    கொரோனா பாதிப்பு, எல்லை பிரச்சனை, பொருளாதார ரீதியான மோதல், வர்த்தக போட்டி, எல்லை கட்டுமான சண்டை என்று நிறைய காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது. 25 நாட்களாக இதனால் லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

    பாங்கோங்த்சோ ஏரி, தவாங்க், நாதுலா கணவாய், டோக்லாம்.. இந்தியா - சீனா பிரச்சனையின் மைய புள்ளிகள்!பாங்கோங்த்சோ ஏரி, தவாங்க், நாதுலா கணவாய், டோக்லாம்.. இந்தியா - சீனா பிரச்சனையின் மைய புள்ளிகள்!

     அதிக ஆயுதங்கள்

    அதிக ஆயுதங்கள்

    இந்த நிலையில் தற்போது இந்தியா மற்றும் சீனா எல்லையில் இரண்டு நாட்டு ராணுவமும் மாறி மாறி படைகளை குவித்து வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இரண்டு நாட்டு படைகளும் தங்கள் எல்லையில் நவீன ஆயுதங்களை குவித்து வருகிறது. அதிக சக்தி வாய்ந்து நவீன ஆயுதங்களை இரண்டு நாட்டு ராணுவமும் களமிறக்கி வருகிறது. இதனால் சீனா, இந்தியா இரண்டும் போருக்கு தயார் ஆகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

     சாட்டிலைட் புகைப்படங்கள்

    சாட்டிலைட் புகைப்படங்கள்

    இதற்கான சட்டைலைட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி எல்லையில் இரண்டு நாடுகளும் நவீன துப்பாக்கிகள், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள், ராணுவ வாகனங்கள் என்று பல ராணுவ பொருட்களை களமிறக்கி உள்ளது. இந்தியாவும் அந்த எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இந்தியா தற்போது வரை லடாக் எல்லையில் 3000 வீரர்களை களமிறக்கி உள்ளது என்று கூறுகிறார்கள்.

     அதிகமான படைகள்

    அதிகமான படைகள்

    இதற்காக தற்போது சீனா மற்றும் இந்தியா இடையே லடாக் எல்லையில் ஓடும் நதி குறி வைக்கப்பட்டு உள்ளது. அங்கு இருக்கும் பாங்காங் நதியைதான் இரண்டு நாடுகளும் குறி வைத்து இருக்கிறது. நதியின் இரண்டு கரையிலும் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த இடத்தில் சீனா மொத்தம் 2500 வீரர்களை புதிதாக களமிறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

     சீனா செய்வது என்ன?

    சீனா செய்வது என்ன?

    சீனா பின் வரும் விஷயங்களை எல்லையில் செய்து வருகிறது

    • சீனா தனது படைகளை, சோதனைகளை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • ஷான்டாங் விமானம் தாங்கி போர் கப்பல் உள்ளிட்ட விமானம் தாங்கி போர் கப்பல்களில் சீனா பயிற்சி எடுக்க தொடங்கி உள்ளது.
    • சீனா விமானப்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • பெரிய அளவில் தாக்குதலுக்கு தயாராகும் வகையில் சீனா இப்படி செயல்படுகிறது.
    • லடாக் பகுதியில் சீனா போர் விமானங்களை குவித்து வருகிறது.
    • சீனா தனது விமான படைத்தளத்தை விரிவாக்கி உள்ளது. இந்திய எல்லையில் இருந்து 100 முதல் 200 கிமீ தூரத்தில் இந்த பகுதி இருக்கிறது.
    • போர் விமானங்களை வைத்து சீனா தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
     இந்தியா செய்வது என்ன?

    இந்தியா செய்வது என்ன?

    இந்தியா லடாக் எல்லையில் பின் வரும் விஷயங்களை செய்து வருகிறது,

    • இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த போர் கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளது.
    • ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிறிய ரக போர் கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளது.
    • சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை (Chinook heavy-lift helicopters) களமிறக்கி உள்ளது.
    • இந்திய விமானப்படை மிக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • லடாக் எல்லையில் ஆயுதங்கள் குவிப்பு, படை வீரர்கள் குவிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை செய்து வருகிறது.

    English summary
    China and India bring heavy weapons to borders amid tension in Ladakh .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X