For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதுவும் சரியில்லை.. சீனாவின் சின்ன சின்ன மூவ்.. அசராமல் இந்தியா கொடுக்கும் பதிலடி.. என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவும் சீனாவும் தங்கள் எல்லையில் அதிக சக்தி கொண்ட விமானம் தாங்கி போர் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்களை களமிறக்கி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு தற்போது இந்தியா சீனா இடையிலான சண்டையாக உருவெடுத்து உள்ளது. தற்போது இது எல்லை பிரச்சனையாக மாறியுள்ளது. முக்கியமாக லடாக் எல்லையில் அதிக அளவில் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது.

லடாக் மீது சீனா பல வருடங்களாக கண் வைத்து இருந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி லடாக் மற்றும் சிக்கிமில் சீனா அத்துமீற நினைக்கிறது.

எந்த இடம்

எந்த இடம்

அங்கிருக்கும் கரி குன்ஷா விமான நிலையம் அருகே இந்த விமான தளம் அமைக்கப்பட்டுள்ளது. லடாக் அருகே தாக்குதல் நடத்தும் வகையில் சீனா இப்படி செய்துள்ளது. அது மட்டுமின்றி சீனாவின் உளநாட்டு தயாரிப்பில் உருவான விமானங்களை வைத்து சீனா தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா கண்டிப்பாக அமைதியை விரும்பவில்லை. இந்தியாவை சீண்டவே நினைக்கிறது என்கிறார்கள் .

இந்தியா தயார்

இந்தியா தயார்

ஆனால் சீனாவின் இந்த சின்ன சின்ன மூவிற்கு எல்லாம் இந்தியா பெரிய அளவில் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியா ஏற்கனவே சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தீவிரமாக தயாராகிவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்தியா நேற்று தான் C-451 எனப்படும் போர் கப்பல்களை இந்தியா களமிறக்கியது. ஆம்மாள் இந்த கப்பல் தற்போது சீன எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வில்லை.மாறாக எதிர்பக்கம் விஷாகப்பட்டினம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

சீன கப்பல்கள்

சீன கப்பல்கள்

கிழக்கு திசையில் இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த போர் கப்பல்கள் களமிறக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சிறிய ரக போர் கப்பல்கள் ஆகும் இது. அதேபோல் இன்னொரு பக்கம் சீனா அருகே இருக்கும் இந்திய மாநிலங்களில் நவீன ரக சின்னூக் ஹெலிகாப்டர்களை (Chinook heavy-lift helicopters) களமிறக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இது முக்கியமான மூவாக பார்க்கப்படுகிறது.

படை வீரர்கள்

படை வீரர்கள்

இதன் மூலம் எல்லையில் பாதுகாப்பு பணிகளை, ரோந்து பணிகளை செய்ய முடியும். அதன்படி முதல் கட்டமாக அசாமில் தற்போது சின்னூக் ஹெலிகாப்டர்களை ராணுவம் களமிறக்கி உள்ளது . இந்த சின்னூக் ஹெலிகாப்டர்கள் மிகவும் நவீன ரக ஹெலிகாப்டர்கள் ஆகும். இதன் மூலம் அதிக எடையை எடுத்து செல்ல முடியும். மலை இருக்கும் பகுதிகள், மேடான பகுதிகளில் அதிக எடை உள்ள பொருட்களை இதன் மூலம் கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் இந்திய - சீன எல்லையில் அதிக அளவில் வீரர்களை இந்தியா குவிக்க முடியும்.

விமானப்படை

விமானப்படை

ஒரே சின்னூக் ஹெலிகாப்டர் மூலம் பல வீரர்களை எல்லையில் குவிக்க முடியும்.இந்த பெரிய அளவில் படைகளை குவிக்க இப்படி செய்து வருகிறது. அதேபோல் இன்னொரு பக்கம் விமானப்படையும் மிக தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தஞ்சாவூரில் இருக்கும் விமானப்படை தொடங்கி பெங்களூர், உத்தர பிரதேசம், குஜராத் எல்லையில் இருக்கும் படைகள் கூட தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால்தான் அடிக்கடி பல்வேறு இடங்களில் சோனிக் பூம் சத்தம் கேட்கிறது.

சோனிக் பூம்

சோனிக் பூம்

விமானப்படை பயிற்சிதான் இதற்கு காரணம் ஆகும். முக்கியமாக சூப்பர் சோனிக் வேகத்தில் செல்ல கூட விமானங்களை இந்தியா சோதனை செய்து வருகிறது. இதனால்தான் இந்த சத்தம் கேட்கிறது. சீனாவின் விமானப்படை தாக்குதல்களை சமாளிக்கும் வகையில் இப்படி இந்தியா செயல்படுகிறது. அதே சமயம் இன்னொரு பக்கம் படை வீரர்களும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

English summary
China and India move amid border tension makes tension in South Asia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X