For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ்: வனவிலங்குகள், கடல் உயிரின வர்த்தகத்திற்கு தற்காலிக தடை விதித்தது சீனா

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவை புரட்டிப்போட்ட கோரோனா வைரஸ்! தெரிந்து கொள்ள வேண்டியவை

    பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வனவிலங்குகள், கடல் வாழ் உயிரினங்களின் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் வவ்வாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் பரவியதாக கூறப்படுகிறது. இந்த கட்டுவிரியன் பாம்புகளை சீன மக்கள் உணவாக உட்கொள்வதால் அவர்களுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.

    China announces national ban on wild life trade ahead of Coronavirus

    இது வரை இந்த வைரஸ் பாதிப்பால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். 2000-க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக சீன அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

    இந்த நிலையில் கடல் உணவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக கருதப்படும் நிலையில் சீனா முழுவதும் வனவிலங்குகள், கடல் உயிரினங்களின் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அவற்றை வளர்க்கவோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவோ, விற்கவோ கூடாது. இப்படிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என மக்களை சீன அரசு எச்சரித்துள்ளது. இந்த முறை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இது தற்காலிக தடைதான் என அரசு தெரிவித்துள்ளது.

    பயோ வார் ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட கசிவு.. கொரோனோ வைரஸ் உருவானது எப்படி? அதிர்ச்சி தரும் தகவல்! பயோ வார் ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட கசிவு.. கொரோனோ வைரஸ் உருவானது எப்படி? அதிர்ச்சி தரும் தகவல்!

    இதுகுறித்து வேளாண்துறை அமைச்சகம், வனவிலங்குத் துறை கூட்டாக அறிக்கை விடுத்துள்ளது. மேலும் ஹாங்காங்கில் 5 பேரும் மெக்சிகோ, தைவானில் 3 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதை அந்த நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும் சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதி அளிக்கப்படுகின்றனர்.

    English summary
    Corona virus spreads in China and scare globally, China temporarily bans wild life trade.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X