For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹாங்காங்கில் பெரும் பதற்றம்.. முதல்முறையாக களமிறங்கியது சீன ராணுவம்!

Google Oneindia Tamil News

ஹாங்காங்: ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு கடத்தும் திட்டத்தை எதிர்த்து அந்த பகுதி மக்கள் போராடினார். இதனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அடுத்ததாக ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தம் கோரி போராட ஆரம்பித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனா முதல்முறையாக தனது ராணுவத்தை களம் இறக்கி உள்ளது

ஹாங்காங் என்பது சீனாவின் தன்னாட்சி பிரதேசங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அங்கு கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு கொண்டு செல்லும் திட்டத்தை ஹாங்காங் அரசு முடிவு செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் இறங்கி மக்கள் போராடி வருகிறார்கள். முதலில் போராட்டக்கார்களை சமாதானம் செய்வதற்காக ஹாங்காங் அரசு திட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தது.

அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய?அண்ணன் போய் தம்பி வந்தார்.. ராஜபக்சே குடும்பத்தின் கையில் மீண்டும் அதிகாரம்.. யார் இந்த கோத்தபய?

அதிதீவிரம்

அதிதீவிரம்

ஆனால் ஏற்றுக்கொள்ளாமல் போராடியதால் தண்ணீர் பீய்ச்சி அடித்தல், தடியடி நடத்துதல், துப்பாக்கிச்சூடு என பல வழிகளை கையாண்டது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை. போராட்டம் முன்பைவிட அதிக அளவு பரவியது.

திட்டம் ரத்து

திட்டம் ரத்து

லட்சக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் வீதிகளில் இறங்கி போராட ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹாங்காங் அரசு போராட்டதை முடிவுக்கு கொண்டுவர கைது செய்யப்பட்டவர்களை சீனாவுக்கு கடத்தும் திட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

சீனா அதிர்ச்சி

சீனா அதிர்ச்சி

ஆனால் போராட்டம் ஓயவில்லை, தற்போது ஹாங்காங்கில் ஜனநாயக சீர்திருத்தம் வேண்டும் என்று கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீன அரசு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தனது ராணுவத்தை முதல்முறையாக களம் இறக்கி உள்ளது.

சீன ராணுவம்

சீன ராணுவம்

ஹாங்காங் சீனாவின் ஒரு அங்கமாக இருந்தாலும் இதுவரை அங்கு ராணுவத்தை சீனா இறக்கியது கிடையாது. இந்நிலையில் உலகின் மிகப்பெரும் ராணுவமாகக் கருதப்படும் சீன ராணுவம் ஹாங்காங் நாட்டுக்குள் இப்போது இறங்கியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. இதுகுறித்து சீன அதிபர் ஜின்பிங் கூறுகையில், "நாங்கள் இச்செயலை முன்னெடுத்துள்ளோம். வன்முறையை நிறுத்தி குழப்பத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது எங்களது பொறுப்பு" என தெரிவித்தார். சீனா ராணுவம் மறியல் செய்வர்களை கைது செய்யும் பணியினை ஆரம்பித்துள்ளது.

English summary
China sent soldiers to Hong Kong protest sites after pro-democracy protests in Hong Kong
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X