For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீடியா லைவ் நிகழ்ச்சியில் வாழைப்பழம் சாப்பிட்டால் 'மூடு' வருமாம்.. தடை போட்ட சீனா

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ஊடக நிகழ்ச்சியின்போது, வாழைப்பழம் சாப்பிட கூடாது என்று சீனா உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு செய்வது, பாலியல் உணர்வை தூண்டும் செயல் என்று சீன அரசாங்கம் தனது நாட்டு ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சீன நாட்டில் Douyu, Panda.tv, YY போன்ற பல்வேறு ஆன்லைன் ஊடகங்கள் நிகழ்ச்சிகளை லைவ் டெலிகாஸ்ட் செய்து வருகின்றன. பாடல், ஆடல், காமெடி, சமையல் நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் இதில் நடைபெறும்.

China bans 'erotic' eating of the fruit on live streams

இந்த நிகழ்ச்சியை நடத்தும் பெண்களும், பங்கேற்கும் பெண்களும் மினி ஸ்கர்ட், மார்பகம் தெரியுமளவுக்கான ஆடைகளை அணிய கூடாது என்று அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், இப்போது லைவ் நிகழ்ச்சியில் வாழைப்பழம் சாப்பிடுவதை போன்ற காட்சி இருக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

வாழைப்பழம் சாப்பிடுவது பாலியல் உணர்ச்சியை தூண்டும் செயல் என்றும் அந்த நாட்டு அரசு கூறியுள்ளதாம். நமக்கெல்லாம் வாழைப்பழத்தை பார்த்தால் கரகாட்டக்காரன் திரைப்பட காமெடி சீன்தான் நினைவுக்கு வரும். சீனாக்காரர்களுக்கு எது, எதெல்லாமோ நினைவுக்கு வருகிறது பாருங்கள்.

English summary
According to reports from domestic media, China's censors have banned broadcasts of people "seductively eating bananas" online, as part of an ongoing clampdown of the country's live-streaming sites.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X