For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் வெள்ளத்தை தடுக்க வெடி வைத்து அணை தகர்ப்பு.. பேய் மழைக்கு இதுவரை 140 பேர் பலி

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 140 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்நிலையில் அங்கு மழை வெள்ளத்தை தடுக்க வெடி வைத்து அணை தகர்க்கப்பட்டுள்ளது.

Recommended Video

    China Flood : இயற்கையின் சாபத்தில் China | பேராபத்தில் 8.5 மில்லியன் சீன மக்கள் | Oneindia Tamil

    சீனாவில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. உன்னான், குவாங்ஜி, திபெத், குய்சோவ், அன்குய், ஜிலின், லியானிங் உள்ளிட்ட மாநிலங்களில் மழை விடாமல் கொட்டித்தீர்த்து வருகிறது. சீனாவில் உள்ள ஆசியாவிலேயே மிக நீளமான யாங்சி நதி உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    China blasts dam to release floodwaters as death toll rises to 140

    இந்நிலையில் யாங்சி நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள மிகப்பெரிய அணையான த்ரீ கோர்ஜஸ் அணையில் வழக்கமான அளவை விட 15 மீட்டருக்கு மேல் நீர்மட்டம் உயந்துள்ளது.. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே திறக்கப்பட்டுள்ளது. இதனால் யாங்சி நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனிடையே யாங்சி நதியின் கிளை நதிகளில் ஒன்றான சுகேயின் குறுக்கே பெரிய அணை ஒன்று நிரம்பி அருகில் உள்ள பகுதிகள் மூழ்கி உள்ளன.வெள்ளத்தில் மூழ்கின. இதனால் நதிப்படுகையில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக அந்த அணையை நேற்று அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர். இதனால் அணை தண்ணீர் முழுவதும் சுகே ஆற்றில் பாய்ந்து செல்கிறது.

    சீன மக்கள் ராணுவத்துடன் தொடர்பில் உள்ள சில நிறுவனங்கள்.. எது எது தெரியுமா?

    சீனாவில் கடந்த 1998-ம் ஆண்டு கன மழையும், பெருவெள்ளமும் ஏற்பட்டு இருந்தது. அந்த பேரழிவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள். அப்படி ஒரு பேரழிவு இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் 3.78 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2.24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து உள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என சீன ஊடகம் அறிவித்துள்ளது.

    English summary
    Authorities in central China blasted a dam on Sunday to release surging waters behind it amid widespread flooding across the country
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X