For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க ஒபாமாவைக் கூப்பிட்டா நாங்க புதினை கூப்பிடுவோமே.. சீனாவின் போட்டா போட்டி!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சோவியத் யூனியன், ரஷ்யா என்ற பாசத்திலிருந்து இந்தியா விலகி அமெரிக்காவடன் நெருங்கி பல காலமாகி விட்டது. இந்தப் பாசத்தை ரஷ்யாவும் அமைதியாக கவனித்தபடிதான் இருக்கிறது. இந்த நிலையில் குடியரசு தின விழாவக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவை சிறப்பு விருந்தினராகக் கூப்பிட்டு அல்லோகல்லப்படுத்திய இந்தியாவுக்குப் போட்டியாக சீனா தற்போது புதினை வைத்து ஒரு விளையாட்டு காட்டத் திட்டமிட்டுள்ளதாம்.

ஒபாமா 3 நாள் பயணமாக இந்தியா வருகை தந்தார். அவரது மனைவி மிஷலும் உடன் வந்தார். குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக இத்தம்பதி கலந்து கொண்டது.

2 மணி நேரம் உட்கார்ந்து குடியரசு தின விழா அணிவகுப்பையும் ஒபாமா பார்த்து ரசித்தார். இந்தியாவைப் புகழ்ந்து பின்னர் பேசினார்.

ஒபாமாவைக் கொண்டாடிய இந்தியா

ஒபாமாவைக் கொண்டாடிய இந்தியா

ஒபாமா வருகையை இந்தியாவே கொண்டாடியது. அமெரிக்க ஊடகங்கள் மற்றும் சர்வதேச அளவில் ஒபாமாவின் இந்திய வருகைய பிரதான செய்தியாக இடம் பிடித்தது.

கடுப்பில் சீனா, பாகிஸ்தான்

கடுப்பில் சீனா, பாகிஸ்தான்

ஒபாமாவின் இந்திய வருகையால் பாகிஸ்தான் கடும் கடுப்பில் மூழ்கியது. இந்தியாவையும், குடியரசு தினத்தையும் கேலி செய்து டிவிட்டரில் செய்தி போட்டனர். பேஸ்புக்கையும் நாறடித்தனர். அதேபோல சீனாவும் கூட கடுப்பாகவே உள்ளது.

புதினை இழுக்கும் சீனா

புதினை இழுக்கும் சீனா

இந்த நிலையில் இந்தியாவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய அதிபர் புதினை வரவழைத்து தனது நாட்டின் ராணுவ அணிவகுப்புக்கு சிறப்பு விருந்தினராக்க சீனா திட்டமிட்டுள்ளது.

70ம் ஆண்டு கொண்டாட்டம்

70ம் ஆண்டு கொண்டாட்டம்

அங்கு சீன மக்கள் குடியரசு உருவான 1949ம் ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தடவை 2ம் உலகப்போரில் வெற்றி பெற்ற 70ம் ஆண்டு விழா கொண்டாட்டம் விரைவில் நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினர் புதின்

சிறப்பு விருந்தினர் புதின்

அதையொட்டி நடைபெறும் ராணுவ அணிவகுப்பை பார்வையிட புதின் அழைக்கப்பட உள்ளார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்போதே தீவிரமாக தொடங்கி விட்டன. இந்த தகவலை சீன பாதுகாப்பு துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

English summary
China has decided to invite Russian president Putin to tame India for its military parade to be held soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X