For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரும்பு சகோதரர் பாகிஸ்தான் போல இருங்க...ஆப்கன் நேபாளுக்கு சீனா அழைப்பு!!

Google Oneindia Tamil News

பீஜிங்: இரும்பு சகோதரர் பாகிஸ்தானைப் போன்று இருக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் நாடுகளை சீனா கேட்டுக் கொண்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி இந்தக் கூட்டத்தை கூட்டி இருந்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் இவர்களது சந்திப்பு நடந்தது.

ஏஆர் ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்.. அமைச்சர் எஸ்பி வேலுமணி பரபர ட்விட்ஏஆர் ரஹ்மானுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள்.. அமைச்சர் எஸ்பி வேலுமணி பரபர ட்விட்

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

இந்தக் கூட்டம் குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், ''கொரோனாவை தடுக்கும் வகையில் நான்கு நாடுகளும் இணைந்து பணியாற்றுவது, பொருளாதார மீட்டெடுப்பு மற்றும் வளர்ச்சி குறித்து பேசப்பட்டது'' என்றார். இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹம்மது ஹனீப் அத்மர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, நேபாளம் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் க்யாவாலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வர்த்தக மேம்பாடு

வர்த்தக மேம்பாடு

இந்தக் கூட்டத்தில் இரும்பு சகோதரர்கள் போன்ற உறவை கொண்டு இருக்கும் பீஜிங், இஸ்லாமாபாத் இரண்டு நாடுகளும், வர்த்தகம் மற்றும் போக்குவரத்து சாலைகளை அமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வாங் யி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் விஷயத்தில் இம்ரான் கான்

காஷ்மீர் விஷயத்தில் இம்ரான் கான்

சீனாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்து வரும் நிலையில், அண்டை நாடுகளை தனது கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ள சீனா முயற்சித்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாகத்தான் சமீபத்தில் வங்கதேசம் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜம்மு காஷ்மீர் குறித்த விஷயங்களையும் பேசி இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

அமெரிக்கா எச்சரிக்கை

அமெரிக்கா எச்சரிக்கை

தென் சீனக் கடலில் சீனா கோலோச்ச நினைப்பது அமெரிக்காவை எரிச்சல்படுத்தியுள்ளது. தென் சீனக் கடலில் சமீபத்தில் வியட்நாம் எண்ணெய் நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்து இருந்தது. இதனால் வியட்நாமுக்கு ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. இதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இந்த விஷயத்தில் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து செயல்படுகின்றன.

Recommended Video

    Shanghai அருகே பறந்து சென்ற America விமானம்
    ஷாங்காயில் பறந்த அமெரிக்க விமானம்

    ஷாங்காயில் பறந்த அமெரிக்க விமானம்

    சீனா, அமெரிக்கா இடையே அடுத்த கட்டமாக தூதரக ரீதியிலான பனிப் போர் நடந்து வருகிறது. ஹூஸ்டனில் இருக்கும் சீன தூதரகத்தை மூடுமாறு பீஜிங்கிற்கு அமெரிக்கா உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதையடுத்து செங்க்டுவில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை மூடுமாறு சீனா அழுத்தம் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று ஷாங்காய்க்கு அருகே பறந்து சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் இக்கட்டான சூழலில் அண்டை நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சீனா கருதுகிறது.

    English summary
    China calls Afghanistan, Nepal to be like 'iron brother' Pakistan at virtual meeting
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X