For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க ராணுவ விமானத்தை எங்கள் போர் விமானம் முட்டுவது போல் பறக்கவில்லை: சீனா

By Siva
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அமெரிக்க ராணுவ விமானத்திற்கு மிக அருகில் தங்கள் நாட்டு போர் விமானம் பறந்ததாக அமெரிக்கா கூறுவதை ஏற்க சீனா மறுத்துள்ளது.

சீனாவில் உள்ள ஹைனான் தீவுகளில் இருந்து 220 கிமீ தொலைவில் உள்ள சர்வதேச கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க ராணுவ விமானம் பறந்தபோது அதற்கு மிக அருகில் சீன போர் விமானம் பறந்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. மேலும் சீன விமானம் அமெரிக்க கண்காணிப்பு விமானத்திற்கு மிக அருகில் 3 முறை வந்ததாகவும், அதில் இருந்த ஆயுதங்களை காட்டி மிரட்டியதாகவும் அமெரிக்க ராணுவ அட்மிரல் ஜான் கிர்பி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

China Calls US Warplane Accusations 'Groundless': Report

இந்நிலையில் இது குறித்து சீன பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் யாங் யுஜுன் கூறுகையில்,

அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமெரிக்க விமானம் தான் சீன கடற்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. அமெரிக்க கண்காணிப்பு விமானம் கடந்த செவ்வாய்க்கிழமை சர்வதேச கடற்பகுதியில் பறக்கையில் சீன விமானம் போதிய அளவு இடைவேளையில் தான் பறந்தது என்றார்.

அமெரிக்கா கண்காணிப்பது தான் சீன விமான மற்றும் கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று சீன நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைனான் தீவுகளில் உள்ள கடற்பகுதியில் பறந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான உளவு விமானம் இபி-3 மற்றும் சீன விமானம் மோதிக் கொண்டதில் சீனாவைச் சேர்ந்த விமானி பலியானார். இதையடுத்து அமெரிக்க விமானம் ஹைனானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
China told that its fighter jet didn't fly too close to US army plane in the international waters close to Hainan island.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X