For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா வைரஸ் பரவுவதால் உச்சகட்ட பீதி! சீனாவில் 13 நகரங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    China Corona virus infection | உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்... நடுங்கும் நாடுகள்

    பெய்ஜிங்: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் முயற்சியாக சுமார் 13 நகரங்களுக்கான போக்குவரத்தை சீனா ரத்து செய்துள்ளது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், 13 நகரங்களைச் சேர்ந்த 4.1 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

    சீனாவை தவிர பிற நாடுகளில் 6க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட போதிலும், உலக சுகாதார அமைப்பு (WHO) உலகளாவிய அவசரநிலையை அறிவிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.

    ஆனால் சீனாவோ கனடாவை விட மொத்த மக்கள்தொகை கொண்ட ஒரு பகுதியை மொத்தமாக தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படியே பாதிப்பு ஏற்பட்டுள்ள வூகான் உள்ளிட்ட 13 நகரங்களுக்கு போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. அங்குள்ள கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

     அதே மாதிரி அறிகுறி.. சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பா? சிகிச்சை ஆரம்பம் அதே மாதிரி அறிகுறி.. சீனாவிலிருந்து மும்பை திரும்பிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பா? சிகிச்சை ஆரம்பம்

    போக்குவரத்து

    போக்குவரத்து

    ஏற்கனவே 9 நகரங்களுக்கு போக்குவரத்துத் தடை செய்திருந்த சீன அரசு மேலும் நான்கு நகரங்களுக்கு தடையை நீட்டித்துள்ளது. இதன் காரணமாக அந்த நகரங்களில் உள்ள பொதுப் போக்குவரத்தான பேருந்துகள் இயங்கவில்லை. ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மக்கள் கடும் தவிப்புக்குள்ளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஷாங்காய் நகரம்

    ஷாங்காய் நகரம்

    சீனாவில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் பலவிதமான சந்திர புத்தாண்டு விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பெய்ஜிங்கின் ஒரு நகரம், ஷாங்காயின் டிஸ்னிலேண்ட் நகரம் ஆகியவற்றை நோய் பரவாமல் தடுப்பதற்காக தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது.

    800பேருக்கு பாதிப்பு

    800பேருக்கு பாதிப்பு

    கொரோனா வைரஸ் நோயால் இதுவரை 26 பேர் பலியான நிலையில், சீனா முழுவதும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 800-ஆக உயா்ந்துள்ளது. இதில் 177 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக உள்ளது. 1072 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    எப்படி பரவுது

    எப்படி பரவுது

    கொரோனா வைரஸ் மனிதா்களின் சுவாச உறுப்புகள் மூலமே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புதிய ‘கரோனா' வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது என்று அச்சம் தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள் அந்த வைரஸ் பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    English summary
    , China expanded its lockdown to cover 13 cities & 4.1 crore people locked: China fights hard to contain virus spread as death toll climbs
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X