For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் குலைநடுங்க வைக்கும் கொரோனா உயிரிழப்பு.. 2 ஆயிரத்தை தாண்டியது!

Google Oneindia Tamil News

Recommended Video

    கொரோனவை சீனா உருவாக்கியதா ? உண்மை என்ன?

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 136 பேர் கொரானா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்கள்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு வெளியே தெரிய குறைந்தது 15 நாட்கள் ஆகும் என்பதுடன், அந்த வைரஸை கண்டுபிடிக்கவே 15 நாட்கள் ஆகும்.

    இதன் காரணமாக யார் யார் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் கோவிட் 19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

    கொரோனா வைரஸ்: இது ஒன்றும் கொரோனா வைரஸ்: இது ஒன்றும் "மேட் இன் சீனா" ப்ராடக்ட் அல்ல.. இயற்கையானது.. பூசி மெழுகும் சீன தூதர்

    தாமதம்

    தாமதம்

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எவ்வளவோ முயற்சிகளை சீன அரசு மேற்கொண்டாலும் ஆரம்பத்தில் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டது. இது மூச்சுக்காற்றில் பரவும் என்ற விஷயமும், இது வெளியில் தெரியாமல் உடனே பலருக்கும் பரவும் என்ற விஷயமும் தாமதமாகவே சீனாவுக்கு தெரியவந்தது.

    எப்படி பரவியது

    எப்படி பரவியது

    அதன்பிறகு போர்க்கால நடவடிக்கை எடுத்த போதிலும், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், என சங்கலி தொடர்போல் வேகமாக பரவியது. சந்திர புத்தாண்டு விடுமுறையில் மொத்தமாக மக்கள் பயணித்த போது தான் பாதிப்பு அதிகமாக ஆரம்பித்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருமினர். அது பலருக்கும் பரவி விட்டது

    விலங்கில் இருந்து

    விலங்கில் இருந்து

    சீனாவின் வுனானில் இருந்துதான் இந்த வைரஸ் முதல் முதலாக பரவியதாக தகவல் வெளியானது. அதுவும் இறைச்சி கூடத்தில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக சீனா சொல்கிறது. வுகான் நகரமே இப்போது மரண பீதியில் உள்ளது. பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நான்கில் ஒருவர் உடல் நிலை மோசடைந்து பாதிக்கப்படுகிறார்.அதில் சிலர் உயிரிழக்கிறார்கள். இப்படி உயிரிப்போர் மட்டும் ஒரு நாளைக்கு 100ஐ தாண்டுகிறது.

    74184 பேருக்கு பாதிப்பு

    74184 பேருக்கு பாதிப்பு

    இந்நிலையில் சீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதன்கிழமை நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2004 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 136 பேர் உயிரிழந்துள்ளார்கள். கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1749 ஆக உள்ளது. ஹுபே மாகாணத்தில் மட்டும் 1693 பேர் பாதிக்கப்பட்டுள்ர்கள். ஒட்டுமொத்தமாக சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,185 ஆக உயர்ந்துள்ளது.

    English summary
    The number of deaths from the coronavirus outbreak in mainland China rose by 136, pushing the nationwide death toll to 2,004 as of the end Tuesday
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X