For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்கு எதிராக உயிரி போர்... சீனா பாகிஸ்தான் ஒப்பந்தம்... அதிர வைக்கும் அறிக்கை!!

Google Oneindia Tamil News

பீஜிங்: இந்தியாவுக்கு எதிராக உயிரி போர் நடத்துவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதற்காக மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில் சீனாவும், பாகிஸ்தானும் ஈடுபட்டு இருப்பதாக பல்வேறு புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கொரோனா தொற்று வைரஸை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா திணறி வரும்போது வெளியாகி இருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியை ஏறபடுத்தி உள்ளது.

Recommended Video

    India- வுக்கு எதிராக China மற்றும் Pakistan இடையே நடந்த ரகசிய ஒப்பந்தம்

    சீனாவின் வுகானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் வெளியாகி இருப்பதாக அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் சந்தேகித்து வருகின்றன. இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து, கண்டனமும் தெரிவித்து வருகிறது. ஆனால், அந்த நாட்டின் மீது ஆஸ்திரேலியா உள்பட 160 நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

    China entered deal with Pakistan military for bio-warfare capabilities against India

    சீன வைரஸ் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்து இருந்தார். அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும் சீனாவின் ஆய்வகத்தில் இருந்துதான் கசிந்துள்ளது என்று கூறி வருகின்றன. நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னர் சீனாவில் ஆய்வு மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பும் ஒப்புக் கொண்டது.

    இந்த நிலையில், ஆன்டனி கிளான் என்பவர் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அதில், ''சீனாவில் வுகானில் இருக்கும் ஆய்வகமும், பாகிஸ்தான் ராணுவத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளது. இதன்படி திடீரென உருவாகும் நோய்கள், பரவும் நோய்கள் மீதான உயிரியல் கட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்வது என்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த ஒப்பந்தத்தின்படி, சர்வதேச சமுதாயத்திடம் இருந்து எழும் கண்டனங்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆந்த்ராக்ஸ் போன்று மண்ணில் இருந்து உருவாகும் ஒரு வகை பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பாக்டீரியாவை எவ்வாறு தனிமைப்படுத்துவது என்பது குறித்த ஆய்வை இருநாடுகளும் செய்து முடிந்துள்ளன. அதற்கான மண் ஆய்வுகளையும் நடத்தி முடித்துள்ளது. எவ்வாறு இந்த உயிரி திட்டத்திற்கு பாக்டீரியா துணை நிற்கும் என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    விரைவில்.. மொத்தமாக படைகளை வாபஸ் வாங்குகிறோம்.. லடாக்கில் பின்வாங்கும் சீனா.. இந்தியா அதிரடி! விரைவில்.. மொத்தமாக படைகளை வாபஸ் வாங்குகிறோம்.. லடாக்கில் பின்வாங்கும் சீனா.. இந்தியா அதிரடி!

    பாகிஸ்தானுக்கு பாசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் என்ற பாக்டீரியா குறித்த அனைத்து தகவல்களையும் சீனாவின் வுகான் ஆய்வு மையம் கொடுத்துள்ளது. எவ்வாறு நோய் கிருமிகளை கையாளுவது. தகவல்களை எவ்வாறு பறிமாறிக் கொள்வது என்பது குறித்த பயிற்ச்சிகளை பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் சொந்தமாக வைரஸ் டேட்டா மையத்தை உருவாக்கிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வைரஸ்களை கண்டறிதல், எவையெல்லாம் ஆபத்தான நுண்ணுயிர்கள் என்று கண்டறிவது போன்ற பயிற்ச்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.

    English summary
    China entered deal with Pakistan military for bio-warfare capabilities against India
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X