For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென் சீன கடலில் பாதாள சுரங்கம்.. அம்பலமானது சீனாவின் பயங்கர ஆயுதங்கள், போர் விமானங்கள்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: தென் சீன கடலில் பாதாள சுரங்கங்களில் அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை சீனா பதுக்கி வைத்திருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியிருப்பது உண்மை என்று நிரூபணம் ஆகியுள்ளது. செயற்கைகோள் ஆதாரங்களில் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    South China Sea-வில் 2 ஏவுகணைகளை ஏவிய China Army | Oneindia Tamil

    உலகின் மிக முக்கியமான கடற்படை வழித்தடமான தென் சீன கடல் பகுதி முழுவதையும் தனக்கே சொந்தம் என்று சீனா உரிமை கோரி வருகிறது.

    ஆனால் சீனாவின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா, தைவான், மலேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. இதனால் பல ஆண்டுகளாக தென் சீன கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது

    சீனாவுக்கு திரும்பும் பக்கம் எல்லாம் செக் வைக்கும் அமெரிக்கா.. 24 சீன நிறுவனங்ளுக்கு அதிரடி தடை சீனாவுக்கு திரும்பும் பக்கம் எல்லாம் செக் வைக்கும் அமெரிக்கா.. 24 சீன நிறுவனங்ளுக்கு அதிரடி தடை

    தென் சீன கடல்

    தென் சீன கடல்

    தென் சீன கடல் பகுதியில் உள்ள தீவுகள் இயற்கை வளம் மிகுந்தவை ஆகும். இந்த பகுதிதான் உலக நாடுகளின் வர்த்தக ரீதியான கடல்வழி பயணத்துக்கு முக்கியமான வழித்தடமாக உள்ளது. இதன் காரணமாகவே சீனா தென் சீனகடல் பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்து வருகிறது,

     அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்

    அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்

    சீனா, ஹாங்காங்கில் இருந்து 470 கி.மீ தூரத்தில் தென் சீன கடல் பகுதிகளில் உள்ள ஹைனான் தீவில் மிகப்பெரிய யூலின் கடற்படை தளத்தை அமைத்துள்ளது. அந்த தீவில் சீனா தனக்கு சொந்தமான அதிபயங்கரமான போர்க்கப்பல்கள், அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்களை பதுக்கி வைத்து வருகிறது குறிப்பாக இங்கு சாங்க்093 என்ற அணு ஆயுத கப்பல்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல்கள் எதுவும் அமெரிக்காவின் ரேடார் பார்வையில் சிக்கியது இல்லை.

    இந்தியா கூற்று உண்மை

    இந்தியா கூற்று உண்மை

    ஏனெனில் பாதாளம் அமைத்து அதில் கடற்படை தளத்தை உருவாக்கியிருக்கும் என இந்தியா சந்தேகம் தெரிவித்து வந்தது. இந்த சந்தேகத்தையே இப்போது அமெரிக்காவும், இங்கிலாந்தும் முன்வைத்துள்ளன. இதனிடையே இந்தியாவின் கூற்று உண்மை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

    செயற்கை கோள் படம்

    செயற்கை கோள் படம்

    அமெரிக்காவைச் சேர்ந்த பிளானட் லேப் என்ற தனியார் செயற்கைகோள் நிறுவனம் யுலின் கடற்படை தளம் அருகே சீனா பாதாள கடற்படை தளத்தை அமைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளது.. இந்த பாதாள சுரங்கத்துக்குள் சாங்க் 093 நீர் மூழ்கி கப்பல் நுழைவதை தனது செயற்கை கோள் மூலம் படம் பிடித்துள்ளது. இதனால் சீனாவின் கடற்படை ரகசியம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

    அமெரிக்காவுக்கு வார்னிங்

    அமெரிக்காவுக்கு வார்னிங்

    இதனிடையே தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த கிங்ஹாய் மாகாணத்தில் இருந்து சீனா பாலிஸ்டிக் ஏவுகணையான டி.எஃப் -26 பி மற்றும் மற்றொரு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான டி.எஃப் -21 டி ஆகியவற்றை ஜெஜியாங் மாகாணத்திலிருந்து வீசி சோதித்து பார்த்துள்ளது. இது அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

    English summary
    According to a news report said that China has fired two missiles, including one dubbed an "aircraft-carrier killer", into the South China Sea.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X