For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீனாவில் ரம்ஜான் நோண்புக்கு தடை.. முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோட்டல்களை திறந்து வைக்க உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    Ramadan banned in China | சீனாவில் ரம்ஜான் நோண்புக்கு தடை: சீன அரசு அதிரடி உத்தரவு

    ஸிங்ஜியாங்: சீனாவில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் ரம்ஜான் நோண்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஸிங்ஜியாங் மாகாணத்தில் இயங்கும் அனைத்து உணவகங்களையும் திறந்து வைக்க வேண்டும் என்றும் சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இஸ்லாமியர்கள் தங்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை ரம்ஜான் நோண்பு மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோண்பு நேற்று தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அதிகாலை சிறப்பு தொழுகைக்கு பின்னர் நோண்பு தொடங்கி வருகின்றனர்.

    அத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ் அத்துமீறி நுழைந்ததாக இந்திய பத்திரிகையாளரை கைது செய்த இலங்கை போலீஸ்

     ரம்ஜான் நோண்புக்கு தடை

    ரம்ஜான் நோண்புக்கு தடை

    இந்நிலையில் சீனாவின் ஸிங்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நோண்பு மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸிங்ஜியாங் மாகாணத்தில் தான் அதிகளவில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர்.

    ஹோட்டல்கள் திறக்க உத்தரவு

    ஹோட்டல்கள் திறக்க உத்தரவு

    இந்நிலையில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் அம்மாகாணத்தில் இயங்கிவரும் அனைத்து ஹோட்டல்களையும் திறந்து வைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இறை வழிபாடு கூடாது

    இறை வழிபாடு கூடாது

    கடந்த வாரமே ராமலான் மாதத்தில் ஹோட்டல்கள் வழக்கம் போல் இயங்கும் என அம்மாகாண உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தனது வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தது. இதுதொடர்பாக பேசிய அரசு அதிகாரி ஒருவர் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோண்பு மேற்கொள்ள கூடாது, இறை வழிபாடு மேற்கொள்ள கூடாது மேலும் மதம் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு உள்ளூர் அரசு வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

    100க்கும் மேற்பட்டோர் பலி

    100க்கும் மேற்பட்டோர் பலி

    ஒவ்வொரு ஆண்டும் ஸிங்ஜியாங் மாகாணத்தில் இஸ்லாமியர்கள் நோண்பு மேற்கொள்ள அரசு தடைவிதிப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இஸ்லாமியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டால் சீனாவில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக யுகுர் இஸ்லாமிய உரிமை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சமீக காலமாக ஏற்பட்ட மோதல்களில் நூற்றுக்கணகானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த குழு கூறியுள்ளது.

    விரட்டுவதே நோக்கம்

    விரட்டுவதே நோக்கம்

    ஆனால் சீன அரசோ ஸிங்ஜியாங்கில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் மத தீவிரவாதம் வன்முறைகளை தூண்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. யுகுர்ஸை வலுக்கட்டாயமாக விரட்டியடிக்க வேண்டும் என்பதே நோண்பு நோற்க தடைவிதிக்கும் சீனாவின் நோக்கம் "என்று நாடுகடத்தப்பட்ட உலக உய்குர் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் தில்சாத் ரெக்ஸிட் தெரிவித்துள்ளார்.

    மாணவர்களுக்கும் தடை

    மாணவர்களுக்கும் தடை

    ஸிங்ஜியாங்கில் உள்ள பல பள்ளிகளின் வலைதளங்களிலும் இஸ்லாமிய மாணவர்கள் நோண்பு நோற்க தடைவிதித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் சீன அரசு இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டது. சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு ஒரு நாத்திக அரசு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இருப்பினும இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைதொடர்பான விஷயங்களுக்கு சீன அரசு தடை விதிப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    China goverment has banned muslim civil servants to keep Ramalan fasting. Schools also bans students to keep Ramalan fasting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X