For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவுக்கு அடுத்து சாதனை. .. நிலவில் கொடி நாட்டிய சீனா!

Google Oneindia Tamil News

பீஜிங்: நிலவின் மேற்பரப்பில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை சீனா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் பாறை துகள்களை எடுத்து கொண்டு பூமிக்கு திரும்பி வந்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்கா ரஷியாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற உள்ளது. மேலும் நிலவில் அமெரிக்காவுக்கு அடுத்து நிலவில் தங்கள் நாட்டு தேசிய கொடியையும் சீன நட்டு வைத்துள்ளது.

2 மீட்டர் அகலமும், 90 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட அந்த கொடியின் படத்தை சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

சீன ஆராய்ச்சி

சீன ஆராய்ச்சி

அமெரிக்கா, ரஷியா நாடுகளை அடுத்து சீனாவும் நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சி செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நிலவில் இருந்து பாறை துகள்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்வதற்காக சேஞ்ச் 5 என்கிற ஆளில்லா விண்கலத்தை கடந்த மாத இறுதியில் சீனா விண்ணில் செலுத்தியது.

எடுத்து வருகிறது

எடுத்து வருகிறது

லாங் மார்ச் 5 ராக்கெட் மூலம் நிலவுக்கு புறப்பட்ட சேஞ்ச் 5 விண்கலம் சில நாட்களுக்கு முன்பு நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. பின்னர் நிலவில் இருந்து பாறை துகள்களை சேகரித்து மீண்டும் பூமிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

பெருமை

பெருமை

1976-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சீனா நிலவிலிருந்து பாறை துகள்ளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய உள்ளது. அமெரிக்கா ரஷியாவிற்கு பிறகு நிலவில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்யும் 3-வது நாடு என்ற பெருமையை சீனா பெற உள்ளது.

தரை இறங்கியது

தரை இறங்கியது

இந்த நிலையில் அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் காட்சிகளையும், நிலவில் சீன கொடி நட்டு வைக்கப்பட்டு இருக்கும் படங்களையும் சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நிலவில் சீன கொடி

நிலவில் சீன கொடி

நிலவின் மேற்பரப்பில், காற்றில்லாமல் அசைவற்று இருக்கும், ஐந்து நட்சத்திரங்களைக் கொண்ட சீனாவின் செங்கொடி பறக்கிறது.
சீனாவின் கொடி 2 மீட்டர் அகலமும், 90 சென்டிமீட்டர் உயரமும், சுமார் ஒரு கிலோ எடையும் கொண்டதாக அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அமெரிக்கா பர்ஸ்ட்

அமெரிக்கா பர்ஸ்ட்

அமெரிக்கா முதன் முதலில் நிலவில் தனது தேசியக் கொடியை நாட்டிய சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா தனது தேசியக் கொடியை நிலவில் நட்டுள்ளது. 1969-ம் ஆண்டு, அமெரிக்கா, நிலவுக்கு அனுப்பிய அப்பல்லோ-11 என்ற விண்கலம் மூலம் நிலவில் தேசிய கொடியை நாட்டியது.

5 நட்டது

5 நட்டது

எட்வின் பஸ் ஆல்ட்ரின் நிலவில் அமெரிக்காவின் முதல் கொடியை நட்டார். மேலும் அடுத்தடுத்து நிலவுக்குப் 5 விண்கலத்தை அனுப்பியபோதும் தங்கள் நாட்டின் 5 தேசிய கொடிகளை நிலவில் நட்டது அமெரிக்கா.

கூறுவது என்ன

கூறுவது என்ன

அமெரிக்கா நட்டு வைத்த கொடிகளில் ஐந்து கொடிகள் அப்படியே இருப்பது செயற்கை கோள் படம் மூலம் தெரிய வந்ததாக கடந்த 2012-ம் ஆண்டு நாசா கூறியது குறிப்பிடத்தக்கது.

English summary
And next to the United States, China is hoisting its national flag on the moon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X