For Quick Alerts
For Daily Alerts
இந்திய-சீனா எல்லை ஒப்பந்தம் கையெழுத்தானது
பெய்ஜிங்: இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் சீனாவுக்கு 3 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு இன்று சீன பிரதமர் லீ கெகியாங்கை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார். அவருடன் இரு தரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த இந்திய-சீனா எல்லை பதற்றத்தை தணிப்பது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. சீனாவுக்கு சென்ற பிரதமர் மன்மோகன்சிங், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசிய பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் இந்திய-சீனா எல்லையில் பதற்றம் தணியக் கூடும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.