For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா.. பரபரப்பு தகவல்!

Google Oneindia Tamil News

பீஜிங்: சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிப்பது தான் "ஹைப்பர்சோனிக்" ஆகும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா இன்னும் அடங்க மறுக்கிறது. ஆனால் உலகின் வல்லரசு நாடுகள் தாங்கள்தான் பலம் என்று ஆயுத ஆதிக்கத்தை நிரூபித்து வருகின்றன.

China is reportedly testing a hypersonic missile

அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, வடகொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து அணு ஆயுத பலத்தை காண்பித்து வருகின்றன. ராணுவ பலத்தை அதிகரிக்க விரும்பும் நாடுகள் பலவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு ஏவுகணை தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை
இந்த நிலையில் சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்டில் சீனா அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையை ஏவியது, அது பூமியை குறைந்த சுற்றுப்பாதையில் வட்டமிட்டு அதன் இலக்கை நோக்கி இறங்கியது. இது தொடர்பாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பல ஆதாரங்கள்
சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதற்கான பல ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளது. ஹைப்பர்சோனிக் லாங் மார்ச் ராக்கெட் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சீனாவின் ஏவுகணை சோதனை துவக்கங்கள் வழக்கமாக முன்கூட்டியே அறிவிக்கப்படும். ஆனால் ஆகஸ்ட் சோதனை ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டது. என்று அந்த செய்தி கூறுகிறது.

ஒலியை விடவும் 5 மடங்கு..
ஹைப்பர்சோனிக் ஆயுதங்களில் சீனாவின் முன்னேற்றம் "அமெரிக்க உளவுத்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது" என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிப்பது தான் "ஹைப்பர்சோனிக்" என அழைக்கப்படுகிறது. ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகமாக இந்த என்ஜினைக்கொண்டு ராக்கெட்டை செலுத்த முடியும்.

இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்இந்த 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. டெல்டா மாவட்டங்களுக்கு எப்போது மழை? வானிலை மையம் தகவல்

இலக்கை விரைவாக அடைய முடியும்
ஹைப்பர்சோனிக் வளிமண்டலத்தில் குறைந்த பாதையில் பறந்து, இலக்கை விரைவாக அடைய முடியும். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், அவற்றின் தீவிர வேகம் காரணமாக, எதிரிகளுக்கு செயல்பட சிறிது நேரம் கூட கொடுக்காது. இதனால் இந்த ஏவுகணை எதிரிகளை சண்டையிட தயாராக விடாது. வட கொரியா சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை சோதித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
China is reportedly testing a hypersonic missile. "Hypersonic" travels at 5 times or more speeds than sound. Hypersonic" travels at 5 times or more speeds than sound
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X